- Advertisement -
Homeபொழுதுபோக்குகடந்தாண்டில் கலக்கிய கில்லி… அதே போல் இந்த ஆண்டில் ஏப்ரலுக்கு திரையில் ரி ரிலீஸாகும் விஜய்...

கடந்தாண்டில் கலக்கிய கில்லி… அதே போல் இந்த ஆண்டில் ஏப்ரலுக்கு திரையில் ரி ரிலீஸாகும் விஜய் படம் – கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இதுவரை அவர் நடிப்பில் 68 படங்கள் வெளியான நிலையில், இப்போது ஜனநாயகன் என்ற தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துடன் தமிழ் சினிமாவுக்கு குட்பை சொல்லும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக தமிழக அரசியலில் தீவிரம் காட்ட உள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரில் சந்திக்க இருக்கிறார். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவை தோற்கடித்து முதல்வர் நாற்காலியில் அமர்வதே தனது லட்சியம் என்று விஜய் பேசி வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா முத்து கமல் நடித்த ஆளவந்தான் நாயகன் அஜீத்குமார் நடித்த பில்லா விஜய் நடித்த போக்கிரி கில்லி போன்ற படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன.

குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய் திரிஷா பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்த கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு பின் வெளியான இந்த படத்தை தளபதி ரசிகர்கள் கொண்டாடினர். 22 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. கடந்த 2000ம் ஆண்டில் வெளியான இந்த படத்தை 2கே கிட்ஸ் தியேட்டரில் வந்து பார்த்து ரசித்தனர்.

- Advertisement -

அதே போல் இந்த ஆண்டும் விஜய் படம் ஒன்று ரி ரிலீஸ் செய்யப்படுகிறது. கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான படம் சச்சின். விஜய் ஜெனிலியா வடிவேலு தாடி பாலாஜி ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை ஜான் மகேந்திரன் என்பவர் இயக்கி இருந்தார். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். கலைப்புலி தாணு படத்தை தயாரித்திருந்தார்.

ஊட்டியில் கல்லூரியில் படிக்கும் விஜய் ஜெனிலியா இருவருக்கும் இடையே ஏற்படும் காதல், மோதல்தான் படத்தின் கதை. இதில் விஜய் வடிவேலு காமெடி பெரிய அளவில் கிச்சுகிச்சு மூட்டியது. மாபெரும் வெற்றிப் படமான இதை மீண்டும் வருகிற ஏப்ரல் மாதம் ரி ரிலீஸ் செய்ய உள்ளனர். கில்லி போலவே, இந்த படமும் விஜய் ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்