- Advertisement -
Homeபொழுதுபோக்குதூக்கு தண்டனை கைதியை பாட வைக்க ஜெயிலுக்கு சென்ற தேவா - ஜெயிலர் சொன்னதை கேட்டு...

தூக்கு தண்டனை கைதியை பாட வைக்க ஜெயிலுக்கு சென்ற தேவா – ஜெயிலர் சொன்னதை கேட்டு நோ சொன்ன தேனிசை தென்றல்!

- Advertisement -

வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பட்டி தொட்டி எங்கும் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தேனிசை தென்றல் தேவா. அவர் இசையமைத்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக கடந்த 1990களில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பாட்ஷா அண்ணாமலை சூரியன் இந்து கட்டபொம்மன் வான்மதி ஆசை காதல் கோட்டை அவ்வை சண்முகி என பல படங்களை சொல்லாம். குறிப்பாக 1994ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படம் இந்து. நடிகர்கள் சரத்குமார் பிரபுதேவா ரோஜா குஷ்பு உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் ஆகின.

அதிலும் குறிப்பாக வா முனிமா வா என்ற பாடல், ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதே போல் சக்கரவள்ளி கிழங்கு சமைஞ்சது எப்படி என்ற பாடல் கடும் விமர்சனத்தில் சிக்கியது. எனினும் தேவா இசையில் இந்து படத்தில் இடம்பெற்ற பாடல்கள், படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் பக்கபலமாக இருந்தது.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் தேனிசை தென்றல் தேவா கூறியதாவது, வா முனிமா பாடலை படத்தில் பாடியவர் மனோ தான். ஆனால் அதற்கு முன்பு அந்த பாடலை பாட பிரபலமான கானா பாடகர் பழனியப்பனை நான் தேடிக்கொண்டு இருந்தேன். அவர் சென்ட்ரல் ஜெயிலில் கைதியாக இருப்பதாக கேள்விப்பட்டு, ஜெயிலுக்கே சென்று அவரை வா முனிமா பாடலை பாட வைக்க முயற்சித்தேன்.

நானும் இயக்குனர் பவித்ரனுக்கும் ஜெயிலுக்கே நேரில் சென்று அவரை பாட வைக்க பேசினோம். அப்போது அங்கிருந்த ஜெயிலர், அவரை நீங்கள் பாட வைப்பதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் அவர் கொலை குற்றவாளி. தூக்கு தண்டனை கைதி. ஒருவேளை அவர் தப்பி போய்விட்டால் நீங்கள்தான் மாட்டிக் கொள்வீர்கள். நீங்கள்தான் அதற்கு பொறுப்பு.

அதனால் அவர் பாடும் போது அவரது கைகளில் விலங்கு மாட்டிக்கொண்டு அவரை பாட வையுங்கள் என்று எங்களிடம் கூறினார். ஒரு கலைஞனை கையில் விலங்கு மாட்டிக்கொண்டு நான் பாட வைக்க மாட்டேன் சார் என்று நான் அதற்கு மறுத்துவிட்டேன். அவர் ஜெயிலில் இருந்தாலும் ஞானஸ்தன். சரஸ்வதி. நல்ல பாடகர். அதனால் ஜெயிலர் சொன்னதை மறுத்துவிட்டு வந்துவிட்டேன். அதன்பிறகு வா முனிமா பாடலை கமர்ஷியலாக மனோ பாடினார் என்று தேவா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்