- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய குந்தவை, கடவுள் என்னிடம் அனுப்பி வைத்த என் காதலர் - நடிகை...

தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய குந்தவை, கடவுள் என்னிடம் அனுப்பி வைத்த என் காதலர் – நடிகை திரிஷா ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நாயகியாக நடித்துக் கொண்டிருப்பவர் திரிஷா. பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த பிறகு தமிழ் சினிமாவில் செகண்ட் ரவுண்டில் வெற்றிக்கரமாக பவனி வந்துக்கொண்டிருக்கிறார். தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகின்றன.

தமிழில் லியோ விடாமுயற்சி குட் பேட் அக்லி மற்றும் தக்லைப் படங்கள் தெலுங்கில் விஸ்வம்பரா மலையாளத்தில் ஐடென்டி படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் அவரது 45வது படத்தில் திரிஷா நடித்து வருகிறார். இதற்கிடையே நடிகை திரிஷா நடிப்பை விட்டு விலக உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

கோவாவில் நடந்த நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு நடிகர் விஜயுடன் நடிகை திரிஷா தனி விமானத்தில் கோவாவுக்கு சென்றதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மிக விரைவில் திரிஷா சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு விஜய் தலைவராக உள்ள தவெக கட்சியில் இணையப் போகிறார் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

நடிகை திரிஷா செல்லப் பிராணிகள் மீது அதிக அன்பு கொண்டவர். அவர் ஸாரோ என்ற நாயை வளர்த்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று ஸாரோ நாய் இறந்து போனது. இதுகுறித்த தகவலை வருத்தமாக பதிவிட்ட நடிகை திரிஷா சிறிது காலம் சினிமாவை விட்டே விலகி இருக்கப் போகிறேன், ஸாரோவின் மறைவு என் மனதை கடுமையாக பாதித்து விட்டது என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

அஜீத்குமாருடன் திரிஷா நடித்த விடாமுயற்சி படம் வெளியான போது கூட திரிஷா ஒரே ஒரு பதிவை மட்டுமே செய்திருந்தார். அதே நேரத்தில் சில தினங்களுக்கு முன் தனது சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டு விட்டதாகவும் ஒரு தகவலை திரிஷா கூறியிருந்தார். ஆனால் இப்போது திரிஷா நாய்க்குட்டி ஒன்றை தத்தெடுத்த தகவலை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

அந்த நாய்க்குட்டியுடன் இருக்கும் தனது புகைப்படங்களை பதிவிட்டு, இஸ்லியை நான் தத்தெடுத்த நாள், அவள் என்னை காப்பாற்றினாள். என் வாழ்க்கையில் ஒளி தேவைப்பட்ட போது, கடவுள் என்னிடம் அனுப்பி வைத்துள்ளார். என்றென்றும் என் காதலர் இவள்தான், என்று அதில் கூறியிருக்கிறார். இது திரிஷாவின் அன்புக்குரிய ‘யாராவது’ பரிசளித்து இருப்பார்களா, என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்