- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கும் சினிமாவில் அப்படி ஒரு துரோகம் நடந்தது, அந்த நடிகர்களை வெச்சு படம் பண்ண ஆசை...

எனக்கும் சினிமாவில் அப்படி ஒரு துரோகம் நடந்தது, அந்த நடிகர்களை வெச்சு படம் பண்ண ஆசை தான் – வெளிப்படையாக பேசிய இயக்குனர் விக்ரமன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல படங்களை தந்த இயக்குனர்கள் வரிசையில் நிச்சயமாக இயக்குனர் விக்ரமனுக்கு இடம் உண்டு. புது வசந்தம் வானத்தை போல உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பூவே உனக்காக சூர்யவம்சம் பிரியமான தோழி போன்ற ஹிட் படங்களை தந்தவர். இப்போது அவரது மகன் கனிஷ்கா விஜயும் நடிகராகி விட்டார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்பி சௌத்ரி தமிழில் முதலில் தயாரித்த படம் நான் இயக்கிய புது வசந்தம் படம்தான். அந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார் என்னிடம் அசோசியேட் இயக்குனராக பணி செய்தார்.; டிஸ்கசன் வரமாட்டேன், எடிட்டிங் வரமாட்டேன், ஷூட்டிங், டப்பிங் வந்துவிடுகிறேன் என்று முதலிேயே சொல்லிதான் என்னிடம் பணி செய்தார்.

புதுவசந்தம் படத்தை நான் இயக்கிய போது 4 பேர் என்னுடன் உதவி இயக்குனர்களாக பணி செய்தனர். அதில் ஒருவருக்கு, கேஎஸ் ரவிக்குமார் மீது ஈகோ ஏற்பட்டது. கேஎஸ் ரவிக்குமார் பணியில் புலியாக இருப்பார். மிரட்டி சத்தம் போட்டு அனைவரையும் வேலை வாங்குவார். ஏற்கனவே பல இயக்குனர்களிடம் பணிபுரிந்த அனுபவம் மிக்கவர்.

இந்த நிலையில் அந்த உதவி இயக்குனர் என்னிடம் வந்து, கேஎஸ் ரவிக்குமார் வேண்டாம், அனுப்பி விடுங்கள். அவருக்கே எல்லா நல்ல பெயரும் கிடைக்கிறது என்று கூறினார். நான் அதற்கு மறுத்துவிட்டேன். திறமைசாலியை நழுவ விட்டால் நமக்குதான் கஷ்டம் என்றும் சொல்லி புரிய வைக்க முயற்சித்தேன்.

ஆனால் அந்த உதவி இயக்குனர் பிறகு வேலைக்கு வரவில்லை. ஆனால் நேராக தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரியிடம் சென்று, புதுவசந்தம் படம் கதை சரியில்லை. இந்த படம் நிச்சயமாக ஓடாது. கிளைமாக்ஸ் யாருமே ஏத்துக்க மாட்டார்கள் என்று கூறி இந்த படத்தை எடுக்காதீர்கள் என்றே கூறியிருக்கிறார். ஆனால் விக்ரமன் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று எனக்கு ஆதரவாக பேசி ஆர்பி சௌத்ரி அவரை திருப்பி அனுப்பி இருக்கிறார்.

இந்த தகவல் கூட நடந்த பல மாதங்களுக்கு பிறகு கம்பெனி காரில் பயணித்த போது அந்த கார் டிரைவர் நடந்த சம்பவத்தை சொன்ன போதுதான் எனக்கு தெரிந்தது. இப்படியும் சில துரோகங்களை நான் கடந்து வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இப்போது நடிகர்கள் விஜய் சேதுபதி, தனுஷ் போன்றவர்களை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறேன், என்றும் அந்த நேர்காணலில் விக்ரமன் பேசியிருக்கிறார்.

சற்று முன்