- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் பிரபுதேவா இசை நடன நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை - அதற்கான...

நடிகர் பிரபுதேவா இசை நடன நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை – அதற்கான காரணத்தை கேட்டு அப்செட் ஆன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடனப்புயல் என பெயர் வாங்கியர் நடிகர் பிரபுதேவா. துள்ளல் மிகுந்த அவரது நடனம் 1990களில் ரசிகர்களின் மனம் கவர்ந்தது. அப்போது இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என புகழப்பட்டவர் நடிகர் பிரபுதேவா. துவக்கத்தில் டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவுக்குள் வந்த அவர் ஜெண்டில்மேன் வால்டர் வெற்றிவேல் பிரதாப் போன்ற படங்களில் ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் நடனமாடி ரசிகர்களை அசத்தினார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் காதலன் என்ற படத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்து நடிகராக மாறினார். தொடர்ந்து பல படங்களில் நாயகனாக நடித்து முன்னணி நடிகராக மாறிய பிரபுதேவா, விஜய் நடித்த போக்கிரி வில்லு போன்ற படங்களை இயக்கி டைரக்டர் ஆனார். இந்தியில் போக்கிரி படத்தை நடிகர் அக்‌ஷய் குமாரை நாயகனாக நடிக்க வைத்து இயக்கினார். தொடர்ந்து நடனம் நடிப்பு இயக்கம் என பிரபுதேவா சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சி நாளை மிகப் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற உள்ளது. அருண் ஈவன்ட்ஸ் அருண் நிறுவனம் சார்பில் இந்த நிகழ்ச்சி நாளை 22ம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ளது. நடிகர் மற்றும் இயக்குனர் ஹரிக்குமார் இந்த பிரம்மாண்டமான இசை நடன நிகழ்ச்சியை டைரக்ட் செய்கிறார்.

ஆர்ட் டைரக்டர் கிரண் தலைமையில் பல்வேறு விதமான செட்டுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த நடன நிகழ்ச்சியில் நடிகை சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பல திரைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நடிகை சிருஷ்டி டாங்கே தற்போது பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சிருஷ்டி டாங்கே தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றவர். நடன நிகழ்ச்சி குறித்து நடிகை சிருஷ்டி டாங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், டான்ஸ் மாஸ்டர் நடிகர் பிரபுதேவா பங்கேற்கும் நடன நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுகிறேன். மரியாதை இல்லாத அந்த இடத்தில் என்னால் வேலை செய்ய முடியாது என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த நடன இசை நிகழ்ச்சியில் இருந்து நான் விலகுவதற்கு காரணம் நடிகர் பிரபுதேவா அல்ல. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிர்வாகிகள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் தன்னை மரியாதையான முறையில் நடத்தவில்லை என்றும் அதன் காரணமாகவே இந்த நடன நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் அந்த அறிக்கையின் மூலம் நடிகை சிருஷ்டி டாங்கே தெரிவித்து இருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்