நடிகர் அஜீத்குமார் தற்போது நடித்துவரும் படம் விடாமுயற்சி. லைக்கா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 3 மாதங்களாக அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜீத்குமாருடன் திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டார் நடித்து வருகின்றனர். படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களில் கலை இயக்குநர் மிலன் மறைவு மிகப்பெரிய சோகமாக படக்குழுவுக்கு அமைந்தது. ஏனெனில் நடிகர் அஜீத்குமாருக்கு அவர் நெருங்கிய நண்பராக இருந்தார். அதைத்தொடர்ந்து மிலனின் மனைவியே அந்த பணியை தொடர்ந்து வருகிறார்.
அடுத்து படப்பிடிப்பு தீவிரமாக நடந்துவந்த நிலையில் மணல் புயல் ஏற்பட்டதால், படப்பிடிப்பை தொடர முடியவில்லை. இதையடுத்து படப்பிடிப்புக்குழு சென்னை திரும்பியது. அதன்பின் ஒரு வாரம் கழித்து மீண்டும் படக்குழு அஜர்பைஜான் சென்று இப்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதன் காரணமாக வரும் ஜனவரி 30ம் தேதி வரை மட்டுமே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், இனி பிப்ரவரி 2வது வாரம் அல்லது 3வது வாரம் வரை படப்பிடிப்பை 70 நாட்களுக்கு தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் விடாமுயற்சி படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைகிறது. அதன்பின்பு, படக்குழு சென்னை திரும்பி விடுகின்றனர்.
இதற்கிடையே இப்போது விடாமுயற்சி ஷூட்டிங்கை வெயில் அதாவது சூரிய வெளிச்சம் இருக்கும்போதே முடித்துவிடுமாறு அஜீத்குமார், இயக்குநர் மகிழ்திருமேனியை கட்டாயப்படுத்தி வருகிறார். அதாவது, மாலை 5 மணிக்கெல்லாம் அதிக குளிர் வந்துவிடுவதால், அந்த நேரத்தில் குளிரில் நடிக்க முடியாது என்பதால், சூரிய வெளிச்சம் இருக்கும் வரை தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று இயக்குநருக்கு அஜீத்குமார் நெருக்கடி தருவதாக தகவல் வந்துள்ளது.
அஜீத்குமார் அசைவம் சாப்பிடுவது, மதுபானம் அருந்துவது போன்ற பழக்கங்களை கைவிட்டு விட்டதால், குளிரை சமாளிக்க முடியாமல் இந்த முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே வேளையில் தனது ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவை மாற்றிவிட்டு. ஓம்பிரகாஷ் என்ற வேறொரு ஒளிப்பதிவாளரை இயக்குநர் நியமனம் செய்த கோபம் காரணமாகவும் அஜீத், இப்படி இயக்குநர் மகிழ்திருமேனியை டார்ச்சர் செய்யலாம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.





