- Advertisement -
Homeபொழுதுபோக்குடிவிகே கட்சி ஆண்டு விழாவில் நடந்த அந்த சம்பவம், சுயமரியாதை பற்றி மேடையில் பற்றி பேசினால்...

டிவிகே கட்சி ஆண்டு விழாவில் நடந்த அந்த சம்பவம், சுயமரியாதை பற்றி மேடையில் பற்றி பேசினால் மட்டும் போதுமா? – இப்படி ஒரு விமர்சனம் எழுந்து விட்டதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படம் துவங்கி இதுவரை 168 படங்களில் நடித்திருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்ற பாராட்டுக்குரிய இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய்தான். ஒரு படத்தில் நடிக்க ரூ. 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே தமிழ் நடிகர் விஜய்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலக உள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முழுநேர அரசியல்வாதியாக தமிழக தேர்தல் களத்தில் முழுவீச்சில் பணிசெய்ய இருக்கிறார். முதல் கட்டமாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து தனது கட்சிக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன்பிறகு கட்சி கொடியை அறிமுகப்படுத்திய அவர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்திக் காட்டினார்.

தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக பெரியார் காமராஜர் அம்பேத்கர் வீரமங்கை வேலுநாச்சியார் அஞ்சலை அம்மாள் ஆகியோரை அறிவிக்கவும் செய்தார். விஜயின் அரசியல் மாநாட்டுக்கு திரண்டு பல லட்சம் மக்கள் கூட்டத்தை பார்த்து திமுக உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகள் அரண்டு போய்விட்டன. தனது அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்றும் அந்த மாநாட்டில் விஜய் பகிரங்கமாக அறிவித்தார்.

இந்நிலையில் தவெக கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழா கடந்த 26ம் தேதி மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரியில் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது. இதில் விஜய், தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தவெக கட்சியினர் திரளாக பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய விஜய், இது சுய மரியாதையான ஊர், அன்புக்காக எதை வேண்டுமானாலும் விட்டுத் தருவோம், ஆனால் சுய மரியாதையை விட்டுத் தர மாட்டோம் என்று பேசினார்.

ஆனால் அந்த விழாவில் பங்கேற்ற கட்சியினருக்கு 20 வகையான உணவு பரிமாறப்பட்டது. டேபிளில் இலைகளில் உணவு பரிமாறிய நிலையில் அமர இருக்கை வசதி செய்யாததால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நின்றபடியே அந்த உணவை குனிந்து கைகளில் அள்ளி அள்ளி சாப்பிட்டனர். இருக்கை வசதியின்றி நின்றபடி அவர்கள் சாப்பிட்டது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது. பபே முறையில் கையில் தட்டு கொடுத்து அதில் பரிமாறி இருக்கலாம். இப்படி டேபிளில் இலை போட்டு உணவை பரிமாறி இப்படி நிற்க வைத்து அவலமாக சாப்பிட வைத்தது சுய மரியாதையான விஷயமா என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சற்று முன்