- Advertisement -
நடிகை சுனைனா போல் காணப்படும் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவான ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து சுனைனா கூறியிருப்பதாவது, எனது முகத்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மாற்றி வீடியோ உருவாக்கி சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் பரப்பி வருகின்றன். இந்த செயல் மிகவும் அருவருப்பானது. கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்கள் எனது கண்ணியம் தனி உரிமை மற்றும் அடையாளத்தை மீறும் செயலாகும். இது பாலியல் துன்புறுத்தலாகவும் அவதூறாகவும் கருதப்படுவதுடன் இந்திய சட்டப்படி குற்றமாகும். இந்த வீடியோவை உருவாக்கியவர்கள் வெளியிட்டவர்கள் பரப்பியவர்கள் மீது எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இந்த வீடியோவை பகிர்பவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுனைனா கூறியிருக்கிறார்.





