- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகரை ஆள் வைத்து அடித்த வடிவேலு, எவ்வளவு கெஞ்சியும் விடல- வைகை புயலின் கோர...

பிரபல நடிகரை ஆள் வைத்து அடித்த வடிவேலு, எவ்வளவு கெஞ்சியும் விடல- வைகை புயலின் கோர முகத்தை பாருங்கள்

- Advertisement -

வடிவேலு தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதையும் மிகப் பெரிய புகழை பெற்றவர் என்பதையும் பலரும் அறிவார்கள். ஆனால் வடிவேலுவின் இன்னொரு முகத்தை குறித்து அவருடன் நடித்த பலரும் தங்களது பேட்டிகளில் கூறி வருகின்றனர்.

வடிவேலு தன்னுடன் நடிக்கும் சிறு சிறு காமெடி நடிகர்களை ஸ்கோர் செய்ய விடமாட்டார் எனவும் அவருக்கு இணங்கிப்போகவில்லை என்றால் அவர்களின் வாய்ப்புகளை பறித்துவிடுவார் என்றும் பலர் கூறுகின்றனர். சமீப காலமாக வடிவேலு குறித்து பலரும் மிக பகிரங்கமாகவே பேசி வருகின்றனர். கேமராவுக்கு முன்னால் பலரிடமும் அடிவாங்கும் நகைச்சுவை கலைஞனாக இருக்கும் வடிவேலு, கேமராவிற்கு பின்னால் ஒரு கொடுங்கோலனாக நடந்து கொள்வார் என்று அவருடன் நடித்த பலரும் கூறுகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் பிரபல நடிகரான காதல் சுகுமார், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலு தன்னை ஆள் வைத்து அடித்ததாக ஒரு பகீர் சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது 2001 ஆம் ஆண்டு வாக்கில் காதல் சுகுமாருக்கு ஒரு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அந்த படத்தின் இயக்குனர் அவரை வடிவேலு பாணியில் நடிக்க சொன்னாராம். ஆனால் முதலில் அப்படி நடிக்க அவர் ஒப்புக்கொள்ளவில்லையாம். எனினும் அவ்வாறு நடிக்க ஒப்புக்கொண்டால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்ற பட்சத்தில் காதல் சுகுமாரும் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

அதன் பின் ஒரு நாள் முத்துக்காளையும் போண்டா மணியும் “வடிவேலு உங்களை பார்க்க வேண்டும் என்கிறார்” என்று காதல் சுகுமாரிடம் வந்து கூறினார்களாம். அப்போது வடிவேலு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தாராம். காதல் சுகுமாரும் வடிவேலுவை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

- Advertisement -

அங்கே வடிவேலுவை பார்த்த காதல் சுகுமார், “வணக்கம் அண்ணே, நீங்கதான் என்னோட குரு” என்று கூறினாராம். அதற்கு வடிவேலு, “நீ கூட என் வயித்துல பிறந்தவன் மாதிரியே இருக்கன்னு என் ஆத்தா சொல்லும்யா” என்று கூறினாராம். அதன் பின் போண்டா மணியும் முத்துக்காளையும் அந்த அறையில் இருந்து வெளியே போய்விட்டார்களாம்.

அதனை தொடர்ந்து வடிவேலு, சுகுமாரிடம், “என்ன தம்பி, ஒவ்வொரு கம்பெனியா போய் வடிவேலு மாதிரியே நடிப்பேன்னு சொல்லி வாய்ப்பு கேட்கிறியாமே?” என கேட்டாராம். “அண்ணே, உங்களை மாதிரி நான் பாடி லேங்குவேஜ் பண்ணுவேன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா சினிமால அப்படி பண்ணமாட்டேன் அண்ணே” என்றாராம் சுகுமார்.

உடனே வடிவேலு, “இல்லையே, ஒரு படத்துல என்னைய மாதிரியே நடிச்சிருக்கியாமே” என்று கேட்டாராம். ஆனால் காதல் சுகுமாரோ, “வாய்ப்பு போயிடுமோ அப்படிங்குற பயத்துலதான் அப்படி பண்ணேன். இனிமே நான் அப்படி பண்ணமாட்டேன் அண்ணே” என்று பதில் அளித்தாராம்.

அப்போது திடீரென ஒரு ஆள், பின்னால் இருந்து “என்னடா அண்ணனை எதிர்த்து எதிர்த்து பேசிகிட்டு இருக்க” என்று சொல்லி காதல் சுகுமாரை கீழே தள்ளிவிட்டாராம். அதன் பின் தாறுமாறாக சில அடிகள் விழுந்ததாம். “அண்ணே, எனக்கு சினிமாவே வேண்டாம்ண்ணே, நான் ஊரை விட்டு ஓடிடுறேன்” என்று கெஞ்சிவிட்டு அங்கிருந்து ஓடி வந்துவிட்டாராம். இந்த சம்பவத்தை மிகவும் கவலையோடு அந்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் காதல் சுகுமார்.

- Advertisement -

சற்று முன்