வெண்ணிலா கபடிக்குழு படத்தில் ஒரு ஓட்டலில் 50 பரோட்டா சாப்பிடும் போட்டியில் தன் நண்பர்களுடன் கலந்துக்கொள்வார் சூரி. அவர் அதிரடியாக சாப்பிடுவதை பார்த்து ஓட்டல் சர்வரே கலங்கிப் போய் விடுவார். ஒரு கட்டத்தில் 50 பரோட்டா சாப்பிட்ட சூரியிடம் 44 பரோட்டா தான் சாப்பிட்டே என்று சர்வர் ஏமாற்றுவார். அதற்கு சூரி, நீங்க கள்ளாட்டம் ஆடறீங்க எல்லா கோட்டையும் அழி, நான் முதல்ல இருந்து சாப்பிடறேன் என சொல்வார்.
இந்த ஒரு காமெடி காட்சி மூலம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற சூரி காமெடி நடிகராக அடையாளம் பெற்றார். பிறகு முன்னணி ஹீரோக்களுடன் காமெடி ரோலில் நடித்து பிரபல காமெடி நடிகராக மாறினார். குறிப்பாக சிவகார்த்திகேயன் சூரி காம்பினேஷனில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினி முருகன் சீமராஜா படங்கள் மாஸ் ஹிட் ஆனது.
இந்த சூழலில் நடிகர் சூரியை விடுதலை படம் மூலம் கதாநாயகனாக மாற்றியவர் இயக்குனர் வெற்றிமாறன். கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் சூரி அந்த படத்தில் வாழ்ந்து காட்டியிருந்தார். விடுதலை படம் பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படமும் சூரிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது.
ஆனால் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான கொட்டுக்காளி படம் சூரிக்கு வெற்றியை தரவில்லை. அதன்பிறகு இப்போது நடிகர் சூரி மாமன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்போது மண்டாடி என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார். இதில் மகிமா நம்பியார் சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
நடிகர் சூரி இப்போது தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் முக்கியமான கண்டிஷன் ஒன்றை சொல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சூரி நடிக்கும் படங்களில் அவரது தாடியை எடுக்குமாறு எந்த இயக்குனரும் சொல்லக் கூடாது என்பதுதான் அந்த கண்டிஷன். படம் முழுக்க நான் தாடியோடுதான் நடிப்பேன் என்றும் சூரி முக்கிய கண்டிஷனாக கூறி விடுகிறார்.
ஏனென்றால் தாடி இல்லாமல் நடித்தால், என்னுடைய நடிப்பில் மெச்சூரிட்டி தெரிவதில்லை. இந்த தாடிதான் என் முகத்தில் ஒரு மெச்சூரிட்டியை காட்டுகிறது. அதனால் எக்காரணம் கொண்டும் தாடியை மட்டும் எடுக்க சொல்லாதீர்கள். அதை எடுத்துவிட்டால் என்னுடைய ஹீரோயிசம் போய்விடும் என்றும் தெளிவாக சொல்லி விடுகிறார். அதனால் டி ராஜேந்தர் போல இனி சூரியை தாடியுடன்தான் படங்களில் ரசிகர்கள் பார்க்க முடியும்.





