- Advertisement -
Homeபொழுதுபோக்குஆரம்பத்துல என்னைய 2 வருஷம்தான் தாங்கும் என்று சொன்னாங்க, ஆனா 12 வருஷம் ஓட இதுதான்...

ஆரம்பத்துல என்னைய 2 வருஷம்தான் தாங்கும் என்று சொன்னாங்க, ஆனா 12 வருஷம் ஓட இதுதான் காரணம் – வெளிப்படையாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்!

- Advertisement -

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படம் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். கடந்தாண்டில் அவர் நடித்த அமரன் படம் மாபெரும் வெற்றியை சந்தித்தது. அடுத்த விஜய் இவர்தான் என்று சொல்லும் அளவுக்கு சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் மாறியிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, நான் நடிக்க வந்த போது இதெல்லாம் 2 வருஷம்தான் தாங்கும் என்றார்கள். இப்போது 12 வருஷமாகி பிளஸ் 10 வருஷம் அதிகமாகவே வந்துவிட்டது. இதுக்காக என்னை க்ரூம் பண்ணிக்கிட்டோ எல்லாம் கத்துக்கிட்டோ இங்க வரலே.

நம்ம பையன் ஒருத்தன் அங்கிருந்து இங்கே வந்துட்டான்னு என்று சொல்லி கை தட்டிக்கிட்டே இருந்தாங்க. அந்த கைதட்டல் சத்தம் கேட்டு கேட்டு அப்படியே 12 வருஷம் ஓடிக்கிட்டே இருக்கு. இதுக்கு நடுவுல ஏதாவது கத்துக்கணும், புதுசா பண்ணனும் என்று நினைக்கிறேன். எக்ஸ்பெஷலி கோவிட்டுக்கு அப்புறம் அது நடந்ததா, ஏதேச்சையாக நடந்ததா என்றும் எனக்கு தெரியலே.

டாக்டர் படத்துல இது ஸ்டார்ட் ஆச்சுன்னு நான் நினைக்கிறேன். நாமளும் புதுசு புதுசா ஏதாவது பண்ணனும். அதுல எல்லா ஏஜ் குரூப்புக்கான படங்களையும் பண்ணிடணும் என்றும் நினைக்கிறேன். முதல் ரெண்டு படங்கள் வந்த போது என்னை பார்த்த பலர், இதெல்லாம் ரெண்டு வருஷம்தான் தாங்கும் என்று சொன்னார்கள். பத்து பிளஸ் எக்ஸ்டரா ரெண்டு என்று இப்போது வந்துவிட்டது.

இன்னும் கொஞ்ச வருஷம் ஓட்டீடலாம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ரசிகர்கள் கை தட்ட தட்ட இன்னும் அந்த நம்பிக்கை ஜாஸ்தியாகி கொண்டே இருக்கிறது. இந்த கைதட்டலுக்கு சின்சியராக இருந்துவிட வேண்டும் என்று நினைக்கிறேன் நான். நடுவில் இப்படி பண்ணலாம், அப்படி பண்ணலாம் என்ற நிறைய குழப்பங்கள் எனக்கு வந்தது.

ஆனா ரொம்ப சிம்பிள், ஜனங்களுக்கு எது புடிக்குதே அதை பண்ணு. எது புடிக்கலைன்னு அவங்க ரிஜெக்ட் பண்றாங்களோ அதை அக்செப்ட் பண்ணிக்கோ. இது மட்டும்தான் என் மைண்டுல ஓடீக்கிட்டு இருக்கிறது என்று நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சற்று முன்