விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக இம்மாத இறுதியில் குட் பேட் அக்லி படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் திரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அடுத்து நடிகர் சிலம்பரசன் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தை அவர் இயக்கினார். டிரிபிள் ஏ என அழைக்கப்பட்ட இந்த படம் பெரிய அளவில் தோல்வியை தழுவியது.
இந்த படத்தை பார்த்தவர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ஷன் குறித்து மிகவும் மோசமாக விமர்சித்த நிலையில் அடுத்ததாக அவர் இயக்கிய படம்தான் மார்க் ஆண்டனி. விஷால் எஸ்ஜே சூர்யா நடித்த இந்த படம் மாபெரும் வரவேற்பை வெற்றியை பெற்றது. ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
அதன்பிறகுதான் நடிகர் அஜீத்குமாரின் குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கிடைத்தது. குட் பேட் அக்லி டீசர் சமீபத்தில் வெளியாகி ஒரே நாளில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், இந்த படம் மாஸ் ஹிட் ஆக அமையும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
குட் பேட் அக்லி படத்தில் அக்லி என்ற கேரக்டரில் ஒரு அஜீத்குமார் மிகவும் மோசமான ஒரு மனிதராக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த கேரக்டரில் அடாவடித்தனம் அராஜகம் அட்டூழியம் பண்ணும் ஒரு மோசமான கேரக்டரில் நடித்து அஜீத்குமார் அசத்தியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அந்த கேரக்டர் நடிகர் சிம்பு நடிக்க வேண்டியது என்ற தகவல் இப்போது கிடைத்துள்ளது.
அதாவது டிரிபிள் ஏ படத்தில், சிம்பு நடிக்க வேண்டிய பல காட்சிகளை எடுக்க முடியாமல் படத்தை அரைகுறையாக வெளியிட்டதாக அப்போதே படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வருத்தமாக கூறியிருந்தார். இப்போது சிம்பு நடித்திருக்க வேண்டிய அந்த மைக்கேல் கேரக்டரை தான் குட் பேட் அக்லி படத்தில் அஜீத்குமார் கேரக்டராக மாற்றி, சிம்புவுக்கு பதிலாக அஜீத்குமாரை ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்க வைத்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





