தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் மணிகண்டன். காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு மகனாக நடித்த மணிகண்டன், ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். தொடர்ந்து ஜெய்பீம் படத்தில் அவரது நடிப்பு பெரிய பாராட்டை பெற்றது. தொடர்ந்து குட்நைட் லவ்வர் குடும்பஸ்தன் படங்கள் அவரை முன்னணி நடிகராக மாற்றியிருக்கிறது.
சினிமாவில் வரும் தனது கேரக்டர் போலவே நிஜத்திலும் மிக எளிமையானவராக எதார்த்தமானவராக இருக்கும் நடிகர் மணிகண்டன் உதவி இயக்குனராக பணிசெய்தனர். ஸ்கிரிப்ட் ரைட்டர். டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்தவர். அதனால் மனிதர்கள் உறவுகள் சமூக வாழ்க்கை குறித்த அதீத பார்வையும் அவரிடம் காணப்படுகிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் மணிகண்டன் கூறியதாவது, இன்றைய மனிதர்களுக்கு எதன் மீதும் ஒரு பிடிப்பு இல்லை. எது மீது பிடிப்பு இல்லாமல் வாழ்வது இப்போது மிக சாதாரணமாகி விட்டது. குடும்ப உறவுகளில் இருக்கிற மனிதர்களிடமும் இது அதிகமாகி விட்டது.
ஒரு படத்தோட ரைட்டர் என்கிட்ட பேசும்போது இந்த விஷயத்தை சொன்னார். அவங்க வீட்டில் ஒரு டிவி இருந்திருக்கு. 22 ஆண்டுகளாக ஓடிய டிவி, பழைய காலத்து டிவி, திடீரென ரிப்பேர் ஆகி விட்டது. டிவி மெக்கானிக் வந்து பார்த்துட்டு, டிவி சரி செய்ய முடியாது, இனி ஓடாது. வேணும்னா 1000 ரூபா கொடுத்து பழசுக்கு நான் எடுத்துக்கறேன்னு சொல்லி இருக்கிறார்.
அஞ்சு நிமிஷம் கழிச்சு பார்த்தால், அந்த வீட்டுல இருக்கிற எல்லோரும் அழுதிருக்காங்க. 22 வருஷமா வீட்டுக்குள்ள ஓடீட்டு இருந்த டிவி இப்படி ஓடாம ரிப்பேர் ஆகி போயிருச்சே, இப்போ எடுத்துட்டு போக போறாங்களே அப்படீன்னு பீல் பண்ணி அழுதிருக்காங்க. யாருக்கும் அந்த டிவியை கொடுக்கறதுக்கு மனசு இல்லே.
அப்புறம் அவங்க டிவியை மெக்கானிக் கிட்ட தரலே. அது வீட்லயே இருக்கட்டும் என்று துணியில் போட்டு சுத்தி டிவியை மேல வெச்சுட்டாங்களாம். இப்போ அந்த அட்டாச்மென்ட் குடும்பத்துல கூட இல்லே. எது மீது அட்டாச் இல்லே. பிடிக்கலையா போன்னு ஈஸியா யாரும் சொல்லிடறாங்க என்று நடிகர் மணிகண்டன் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





