தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் ரவி மோகன். அவர் சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை பிரிந்த நிலையில், விவாகரத்து கேட்டு சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார். வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. இதற்கிடையே பாடகி கெனிஷா என்பவருடன் நெருக்கமான நட்பில் அவர் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் 2 படங்களில் நடிக்க கடந்தாண்டில் நடிகர் ரவிமோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பிறகு 12 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு, அதில் அட்வான்ஸ் ஆக ரூ. 6 கோடியும் நடிகர் ரவி மோகன் பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் அவர் நடிக்கவில்லை. அட்வான்ஸ் ஆக வாங்கிய ரூ. 6 கோடியையும் திருப்பித் தரவில்லை.
பலமுறை கேட்டும், அந்த 6 கோடி ரூபாயை திருப்பித் தராததால், அந்த தயாரிப்பு நிறுவனம் ரவிமோகன் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த 6 கோடி ரூபாய்க்காக நடிகர் ரவிமோகன், தனது சொத்து ஆவணங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் அந்த சொத்து ஆவணங்களை நடிகர் ரவிமோகன் தாக்க செய்ய மறுத்துவிட்டார்.
இதையடுத்து மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பாபிடச் கோல்டு யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனம் சார்பில், நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்க மனுதாக்கல் செய்ய அனுமதி கோரியது. இதற்கு நீதிபதி அனுமதி அளித்த நிலையில், அவரது சொத்துகளை முடக்கும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
இதற்கிடையே சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடிகர் ரவிமோகனுக்கு சொந்தமான பங்களா உள்ளது. வங்கி கடனுதவியால் வாங்கப்பட்ட இந்த வீட்டுக்கு கடந்த 10 மாதங்களாக, வங்கிக்கு கடன் தவணைகளை நடிகர் ரவி மோகன் செலுத்தவில்லை. அதனால் இந்த வீட்டை ஜப்தி செய்ய வங்கி தரப்பில் இருந்து நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. கொரியர் சர்வீஸ் மூலம் அந்த நோட்டீஸை வாங்க மறுத்த நடிகர் ரவிமோகன் தரப்பு, வங்கியில் வந்து பெற்றுக்கொள்வதாக திருப்பி அனுப்பி விட்டது.
ஒருபுறம் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சொத்துகளை முடக்கும் அபாயம், மறுபுறம் சொந்த வீட்டுக்கு 10 மாத தவணைகள் பாக்கி வைத்ததால் வீட்டை ஜப்தி செய்யும் வங்கி நடவடிக்கை, இந்த பிரச்னைகளுக்கு மத்தியில் பட்டுவேட்டி சட்டையில் தனது நெருங்கிய தோழி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் திருப்பதி கோவிலில் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இவரு அட்ராசிட்டி வேற லெவலா இருக்குதே என ரசிகர்கள் புலம்புகின்றனர்.





