அமரன் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து தற்போது, பராசக்தி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இது நடிகரின் 25 ஆவது திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. படம் தொடங்கப்பட்டது முதல் விறுவிறுப்பாக சூட்டிங் பணிகளை நடத்தி வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா.
இந்த திரைப்படம் முதலில் சூர்யாவுக்கு சென்றது இங்கு பலருக்கும் தெரியும். அப்போது இதற்கு புறநானூறு என்று தான் டைட்டில் வைத்தார்கள். இதனை சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனமே தயாரிப்பதாக இருந்தது. பிறகு ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளால் இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் கைக்கு சென்றது.
ஆனால் இந்தக் கூட்டணிக்கும் புறநானூறு என டைட்டில் வைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. அதற்கான என்ஓசி சான்றிதழ் சூர்யாவின் 2d நிறுவனத்திடம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக படத்தின் பெயரை மாற்றினார்கள். அதன்படி பராசக்தி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கும் தற்போது வரை பிரச்சனை இருந்து கொண்டு தான் வருகிறது.
குறிப்பாக சிவாஜி ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தங்கள் தலைவரின் முதல் காவியமான பராசக்தி படத்தின் டைட்டிலை இதில் வைக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதையெல்லாம் தயாரிப்பு நிறுவனம் காதில் வாங்கிக் கொண்டது போலவே தெரியவில்லை. இருப்பினும் படம் வெளியாகும் போது இது குறித்து சர்ச்சை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதில் ரவி மோகன் வில்லனாக நடிப்பதும் அதர்வா மற்றும் ஸ்ரீலா ஆகியோர் நடிப்பதும் நம் அனைவருக்கும் தெரியும். தற்போது இலங்கையில் சூட்டிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளார்களாம். இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் உடனான மதராசி படத்தின் மீதமுள்ள காட்சிகளின் நடிக்க சிவகார்த்திகேயன் தயாராகி வருகிறார்.
இதற்காக பெரிய துறைமுக செட்டப் அவர்களுக்கு தேவைப்படுகிறதாம். இலங்கையில் உள்ள துறைமுகத்தில் முதலில் படமாக்க அவர்கள் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் படமாக்க முடிவு செய்திருக்கிறார்களாம். அங்கு முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டதும் படப்பிடிப்பு நிறைவடையும் என கூறப்படுகிறது. பராசக்தி சூட்டிங்கிற்கு பிறகு இதில் சிவகார்த்திகேயன் இணைய உள்ளார். ஏற்கனவே கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பும் பெரும்பாலும் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.





