தமிழக வெற்றிக் கழகம் அரசியல் கட்சியின் தலைவராக நடிகர் விஜய் உள்ளார். அவ்வப்போது திமுக அரசு குறித்து கடுமையாக விமர்சிக்கும் விஜய், மத்தியில் ஆளும் பாஜக அரசு குறித்தும் அவ்வப்போது விமர்சித்து பேசி வருகிறார். அரசியல் எதிரி திமுக என்றால் கொள்கை எதிரி பாஜக என்றும் கூறி வருகிறார்.
நடிகர் விஜய் திமுக அரசை பாயாசம் என்றும் பாஜக அரசை பாசிசம் என்றும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜய் ஒர்க் பிரம் ஹோம் முறையில் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
தொடர்ந்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது, டிவிகேவை முதலில் வரச்சொல்லுங்க, ஸ்கூல் பசங்க மாதிரி உட்கார்ந்துட்டு அரசியல் பண்ணீட்டு இருக்காங்க. சினிமா ஷூட்டிங் மாதிரி அரசியல் பண்ணுவாங்களா. சினிமா ஷூட்டிங்கில் உட்கார்ந்து பாட்டு பாடீட்டு நடிகைகள் இடுப்பை பிடிச்சு கிள்ளீட்டு அரசியல் பண்ணீட்டு இருக்கார் விஜய். திரும்ப எங்களுக்கும் பேசத் தெரியும். டிவிகே பவுண்டரியைே தாண்டக் கூடாது.
நான் இதுவரைக்கும் டிவிகேவை மரியாதையாக பேசீட்டு இருக்கேன். அறிக்கை விடும்போது கவனமாக இருக்கணும். நான் என்ன விஜய் மாதிரி ஷூட்டிங்கில் உட்கார்ந்துட்டு நடிகைகள் இடுப்பை கிள்ளிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டா அறிக்கை கொடுத்துட்டு இருக்கேன். மக்களுக்காக களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்கிறேன். களத்தில் இருந்து பேசுகிறேன்.
ஒர்க் பிரம் ஹோமா நடிகர் விஜய்க்கு அரசியல்? யார் நாடகம் செய்கின்றனர். 50 வயதில் தான் அரசியலுக்கு வர விஜய்க்கு தோன்றியதா? 30 வயதில் விஜய் எங்கே போனார்? விஜய் யாரோட பி டீம் என்று தெரியுமா, நாடகம் யார் பண்றாங்க. நாடகம் பண்ணுவது விஜய், நாடகம் பண்ணுவது டிவிகே.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பி டீம்தான் விஜய். இன்னிக்கு நான் ஆணித்தரமாக உறுதியாக சொல்கிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் நடவடிக்கையை பார்த்த பிறகு நான் சொல்கிறேன். வருகிற சட்டசபை தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று திமுக ஆரம்பித்த சீக்ரெட் ஆபரேஷன்தான் நடிகர் விஜய் ஆரம்பித்த தமிழக வெற்றிக் கழகம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.





