- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஆர் 51 - நாயகியாக நடிக்கப் போவது யார் தெரியுமா?...

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் எஸ்டிஆர் 51 – நாயகியாக நடிக்கப் போவது யார் தெரியுமா? – ஏகப்பட்ட லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சுங்க!

- Advertisement -

ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அவரது இயக்கத்தில் வெளியான 2வது படம் டிராகன். கடந்த மாதம் 21ம் தேதி வெளியான இந்த படம் 25 நாட்களில் ரூ. 150 கோடி வசூலித்த பிளாக் பஸ்டர் படமாக அமைந்து அஸ்வத் மாரிமுத்துவுக்கு பெரிய புகழை தேடித் தந்திருக்கிறது.

இந்த படத்தில் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்து அசத்தி இருந்தார். அனுபமா பரமேஸ்வரன் கயாடு லோஹர் மிஷ்கின் இவானா கௌதம் மேனன் ஜார்ஜ் மரியன் தேனப்பன் கேஎஸ் ரவிக்குமார் விஜே சித்து உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான மாபெரும் வெற்றிப் படமாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையடுத்து இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து அடுத்ததாக நடிகர் சிலம்பரசன் நடிக்கும் 51வது படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார். பத்துதல படத்துக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தக்லைப் படம் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் திரிஷா நடித்த இந்த படத்தில் நெகடிவ் ரோலில் சிம்பு நடித்திருக்கிறார். வருகிற ஜூன் 5ம் தேதி இந்த படம் ரிலீஸாக உள்ளது.

பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்புவின் 49வது படமும், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 50வது படமும் உருவாகிறது. காட் ஆப் லவ் என்று பெயரிடப்பட்ட தனது 50வது படத்தை நடிகர் சிம்புவே சொந்தமாக தயாரிக்கிறார். இதற்காக அட்மின் சினி ஆர்ட்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் துவங்கியிருக்கிறார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 51வது படத்துக்கு இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். இவர் வளர்ந்து வரும் முக்கிய இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் கவனம் பெற்று வருகிறார். மேலும் டிராகன் பட நடிகை கயாடு லோஹர் சிம்புவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் சிம்புடன் நடிகர் சந்தானமும் இணைந்து நடிக்கிறார். மன்மதன் வல்லவன் ஒஸ்தி படங்களுக்கு பிறகு சிம்புவுடன் சந்தானம் மீண்டும் காமெடி ரோலில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் முக்கிய கேரக்டரில் நடிகை சாய்பல்லவியும் இந்த படத்தில் நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு துபாயில் துவங்க இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சற்று முன்