- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் ஆனதே திமுக கூட்டணி தயவில்தான், இதுல பிரதமர் ஆகணுமா? வருங்கால அமெரிக்க ஜனாதிபதின்னு...

முதல்வர் ஆனதே திமுக கூட்டணி தயவில்தான், இதுல பிரதமர் ஆகணுமா? வருங்கால அமெரிக்க ஜனாதிபதின்னு சொல்லுங்கப்பா – டிவிகே கட்சியை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!

- Advertisement -

அதிமுக – திமுக கட்சிகளே மாறி மாறி தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்த நிலையில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று கருதிய தமிழக மக்களில் 1.70 கோடி பேர் கடந்த சட்டசபை தேர்தலில் தவெக கட்சிக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். இதனால் 108 இடங்களில் வெற்றி பெற்ற விஜய், திமுக கூட்டணியில் வென்ற காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக கட்சிகளின் ஆதரவுடன் தமிழக முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.

கடந்த சட்டசபை தேர்தலில் வாக்களித்த தமிழக மக்களில் 3ல் ஒரு பங்கு மட்டுமே தவெக கட்சிக்கு ஆதரவாக விசிலுக்கு ஓட்டுப் போட்டனர். மீதி 2 பங்கு மக்கள் திமுக அதிமுக கூட்டணி கட்சிகள் மற்றும் நாதக கட்சிகளுக்கு தான் ஓட்டு போட்டிருக்கின்றனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 12 பேர் ஆதரவுடன் தவெக ஆட்சி நடத்தி வருவதும் உண்மை.

இந்த சூழ்நிலையில் முதல்வராக விஜய் பதவிக்கு வந்த பிறகு அவரது நிர்வாக செயல்பாடும் அமைச்சர்கள் எம்எல்ஏக்களின் செயல்பாடும் சட்டசபையில் அவர்கள் பேசுகிற தொனியும் நடந்துக்கொள்கிற விதமும் மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. குறிப்பாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா புஸ்லி ஆனந்த் ரமேஷ் மரியவில்சன் ராஜ்மோகன் போன்றவர்களின் பேச்சில் ஆணவம் திமிர் தலைக்கணம் அதிகம் வெளிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தவெக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளிலும் தில்லாலங்கடி செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தை தொட மாட்டோம் தொட்டால் விட மாட்டோம் தொட்டவர்களையும் விட மாட்டோம் என்று சினிமா டயலாக் பேசி முழங்கிய முதல்வர் விஜய், எம்எல்ஏக்களுக்கு இலவச கார் உதவியாளர்களுக்கு ரூ. 75 ஆயிரம் மாத சம்பளம் அறிவித்துள்ளார்.

மேலும் 5.58 கோடி ரூபாய் செலவில் முதல்வர் அறையை மாற்றி நவீனப்படுத்துதல் போன்ற செயல்பாடு மக்களுக்கு எரிச்சலை தந்துள்ளது. இதற்கிடையே அவரது படங்களை தயாரித்த அர்ச்சனா கல்பாத்தி வெங்கட் கே நாராயணா போன்றவர்களுக்கு அரசு பதவிகளை தருவது, நண்பர்களுக்கு அரசு பதவியை வழங்குவது என விஜயின் இந்த சுயநலமான நடவடிக்கைகளால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இதற்கிடையே வருங்கால பிரதமர் விஜய் என்றும் 2031ல் இந்தியாவின் பிரதமர் விஜய்தான் என்றும் தவெக கட்சியினர் பேசத் துவங்கி விட்டனர். இணையத்திலும் இதுபோன்ற கருத்துகளை பரப்பி வருகின்றனர். தற்குறி கூட்டம் என்று மக்களால் விமர்சனம் செய்யப்படுகிற தவெக கட்சியினர், முதல்வராக விஜய் இருப்பதே திமுக கூட்டணியின் எம்எல்ஏக்களின் ஆதரவில் தான். இந்த சூழலில் இந்திய பிரதமராக வேண்டுமா? வருங்கால அமெரிக்க ஜனாதிபதி என்று சொல்ல வேண்டியதுதானே என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்