- Advertisement -
Homeபொழுதுபோக்குகல்லூரி விழாக்களுக்கு ஹிப் ஹாப் ஆதி சிறப்பு அழைப்பாளராக வர வேண்டுமா? இதுக்கு மட்டும் ஓகே...

கல்லூரி விழாக்களுக்கு ஹிப் ஹாப் ஆதி சிறப்பு அழைப்பாளராக வர வேண்டுமா? இதுக்கு மட்டும் ஓகே சொன்னா போதும் – பெரிய மனசு ப்ரோ உங்களுக்கு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருப்பவர் ஹிப் ஹாப் ஆதி. பல படங்களில் நடித்து நடிகராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்திருக்கிறார். மீசைய முறுக்கு சிவகுமாரின் சபதம் நட்பே துணை அன்பறிவு நான் சிரித்தால் பிடி சார் கடைசி உலகப்போர் உள்ளிட்ட படங்களில் ஹிப் ஹாப் ஆதி நடித்திருக்கிறார்.

இதில் கடைசி உலகப்போர் என்ற படத்தை தயாரித்த ஹிப் ஹாப் ஆதி பலத்த நஷ்டத்தை சந்தித்தார். இதுவரை இசையமைத்தும் படங்களில் நடித்தும் சம்பாதித்த பணத்தை எல்லாம் மொத்தமாக கொட்டி கடைசி உலகப் போர் படத்தை அவர் தயாரித்த நிலையில், அந்த படம் பிளாப் ஆகி பலத்த நஷ்டத்தை அவருக்கு ஏற்படுத்தியது.

இதையடுத்து இனிமேல் படங்களை தயாரிப்பது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்ட ஹிப் ஹாப் ஆதி, படங்களில் நடிப்பதை காட்டிலும் இனி படங்களுக்கு இசையமைப்பதில் முழு கவனமும் செலுத்த திட்டமிட்டுள்ளார். வழக்கமாக சுந்தர் சி இயக்கும் படங்களுக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து வரும் நிலையில், இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கும் ஹிப் ஹாப் ஆதி தான் இசையமைக்க உள்ளார்.

சினிமாத் துறை சார்ந்த பிரபலங்களை சிறப்பு விருந்தினராக முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அழைப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அடிக்கடி சினிமா செலிபரட்டிகள் வரவழைக்கப்படுகின்றனர். இதில் கல்லூரி நிர்வாகம் மட்டுமின்றி விழா ஏற்பாடு செய்யும் டிபார்ட்மென்ட் மாணவ மாணவியரும் நிறைய பணம் செலவழித்து அவர்களை வரவழைக்கின்றனர்.

அவ்வாறு வரும் சினிமா பிரபலங்கள் பலரும் விமான டிக்கெட் செலவு மற்றும் கணிசமான தொகை கட்டணமாக வசூலித்து விடுகின்றனர். ஆனால் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் ஆதியை பொருத்த வரை கல்லூரி நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் ப்ரீயாக வந்து செல்வார். எந்தவிதமான கட்டணமும் அவர் வாங்குவதில்லை.

ஆனால் அதே நேரத்தில் படிக்க வசதியற்ற கல்லூரி கட்டணம் செலுத்த வாய்ப்பில்லாத மாணவர்கள் தன்னை அணுகினால், அதுபோன்ற ஏழை மாணவர்களுக்கு உதவுமாறு அந்த கல்லூரி நிர்வாகங்களை கேட்டுக் கொள்கிறார். தன்னிடம் உதவி கேட்டு வரும் மாணவர்களை அந்த கல்லூரில் கட்டணமின்றி சேர்த்துக்கொள்ளுமாறு அனுப்பி வைத்து விடுகிறார். இப்படி பல மாணவர்களுக்கு இதுவரை ஹிப் ஹாப் ஆதி உதவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனால் கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதன்மூலம் அந்த கல்லூரிகளில் ஏழை மாணவர்கள் சேர்ந்து படிக்க உதவி வருகிறார் என்பது நிச்சயம் பாராட்டுக்குரியது என ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர்.

சற்று முன்