மலையாளத் திரையுலகில் இயக்குனராகவும் நடிகராகவும் ஜொலிப்பவர் பிரித்திவிராஜ். சீரியசான கதைக்களம் என்றாலும் சரி, நகைச்சுவையான திரைப்படம் என்றாலும் சரி, மசாலா ஸ்டோரி என்றாலும் சரி அதில் கலந்து கட்டி விளையாடி தனக்கான திறமையை நிரூபித்து விடுவார் பிரித்திவிராஜ்.
அவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான ஏராளமான திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இது போக தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்து, பிரித்திவிராஜ் பலரது கவனங்களையும் ஈர்த்து இருக்கிறார். இதில் குறிப்பாக நாம் மொழி திரைப்படத்தை கூறலாம். அதில் கதாநாயகனாக நடித்து, பலருக்கும் விருப்ப நடிகராக அவர் மாறினார்.
அந்தப் படத்தில், ஜோதிகாவுக்குதான் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும், தனக்கான போர்ஷனை நிறைவாக செய்து பாராட்டைப் பெற்றார் பிரிதிவிராஜ். தொடர்ந்து அபியும் நானும் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்த அவரை சமீப காலமாக தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. அதேசமயம் தெலுங்கு உலகில் அவர் கவனம் பெற்றுள்ளார்.
அண்மையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடித்திருந்த சாகர் படத்திலும் அவர் இடம் பெற்றிருந்தார். தற்போது, ராஜமவுலி மகேஷ்பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் என்றால், மறுபக்கம் இயக்கத்திலும் பிரித்விராஜ் கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே இவரது இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆக்சன் திரைப்படமாக இது எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது லூசிபர் இரண்டாம் பாகமாக, எம்புரான் படத்தை அவர் எடுத்துள்ளார். இதற்கான ப்ரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
அதில், லோகேஷ் கனகராஜ் உடனான சந்திப்பில் போது கதை விவாதம் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அடுத்த சில வருடங்களுக்கு அவர் பிஸியாக இருக்கிறார். இரண்டு முறை அவரது எல் சி யூவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் கைநழுவி போய்விட்டது. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவரது இயக்கத்தில் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.





