- Advertisement -
Homeபொழுதுபோக்குஉயிர் நண்பனிடமே 6 மாதங்கள் முகத்தை திருப்பிக்கொண்ட விஜய்! இந்த சின்ன விஷயத்துக்கா இப்படி சண்டப்போடுறது?

உயிர் நண்பனிடமே 6 மாதங்கள் முகத்தை திருப்பிக்கொண்ட விஜய்! இந்த சின்ன விஷயத்துக்கா இப்படி சண்டப்போடுறது?

- Advertisement -

விஜய் எந்த ஒரு நடிகருடனும் அவ்வளவு நட்பாக பழகமாட்டார் என்று பலர் கூறுவது உண்டு. எப்போதும் விஜய் தனக்கு தானே ஒரு வட்டத்தை போட்டுக்கொள்வார் என்றும் அந்த வட்டத்தை தாண்டி யாருடனும் நெருக்கமாக பழகமாட்டார் என்றும் பலர் கூறுவார்கள். எனினும் சிறு வயதில் இருந்தே விஜய்க்கு ஒரு சிறிய நண்பர்கள் வட்டம் உண்டு. அந்த நண்பர்கள் வட்டத்தில் மிக முக்கியமான நண்பராக இருப்பவர்தான் சஞ்சீவ்.

சஞ்சீவ் “மெட்டி ஒலி”, “திருமதி செல்வம்” போன்ற தொலைக்காட்சி தொடர்களின் மூலம் மக்களிடையே பிரபலமாக அறியப்பட்டவர். இவர் அதற்கு முன்பே 1989 ஆம் ஆண்டு விஜயகாந்தின் “பொன்மன செம்மல்” என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

- Advertisement -

அதன் பின் பல திரைப்படங்களில் நடித்தார் சஞ்சீவ். குறிப்பாக விஜய் நடித்த “சந்திரலேகா”, “நிலாவே வா”, “பத்ரி”, “புதிய கீதை”, “மாஸ்டர்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் சில திரைப்படங்களில் விஜய்க்கு நண்பனாகவே நடித்திரக்கிறார் சஞ்சீவ்.

சஞ்சீவ் சமீபத்தில் கூட “பிக் பாஸ்” சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாது டப்பிங் கலைஞரும் கூட. ஜெய் ஆகாஷ், சினேகன் ஆகியோர் ஹீரோவாக நடித்த திரைப்படங்களில் அவர்களுக்கு பின்னணி குரலாக இருந்துள்ளார். மேலும் “மாநாட மயிலாட” உள்ளிட்ட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

- Advertisement -

இவ்வாறு பல வருடங்களாக மீடியா மற்றும் திரைப்படங்களில் வலம் வருகிறார் சஞ்சீவ். இந்த நிலையில் விஜய் தனது உயிர் நண்பனான சஞ்சீவ் மீது கோபப்பட்டு சண்டை போட்டு கிட்டத்தட்ட 6 மாதங்கள் பேசாமல் இருந்தாராம். அதாவது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஜய்யும் அவரது நண்பர்களும் பங்கேற்பதாக இருந்ததாம். அப்போது திருமதி செல்வம் சீரியலின் படப்பிடிப்பில் இருந்ததால் சஞ்சீவ் “அந்த நிகழ்ச்சிக்கு வரமுடியாது” என கூறியிருக்கிறார். ஆதலால் விஜய் சஞ்சீவ் மீது கோபம் கொண்டாராம். இதனால் கிட்டத்தட்ட 6 மாதங்கள் விஜய் சஞ்சீவ்விடம் பேசாமல் இருந்தாராம்.

- Advertisement -

சற்று முன்