- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7ம் தேதி தக்லைப் டீசர், டிரெய்லர் எதுவுமே வெளிவராது, இப்படி...

கமல்ஹாசன் பிறந்த நாள் நவம்பர் 7ம் தேதி தக்லைப் டீசர், டிரெய்லர் எதுவுமே வெளிவராது, இப்படி ஒரு காரணமா? – ஏமாற்றத்தில் உலக நாயகன் ரசிகர்கள்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் தக்லைப். இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தக்லைப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற அமெரிக்காவில் முகாமிட்டு இருக்கிறார். 45 நாட்கள் இந்த ஏஐ தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்கிறார். மருதநாயகம் படத்தை ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கும் திட்டத்தில் இந்த பயிற்சி கமல் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பரிவ் இயக்கும் தனது 237வது படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

- Advertisement -

கமல்ஹாசனின் கனவு படம் மருதநாயகம், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இந்த படத்தை கமல் ஆரம்பித்தார். ஆனால் மிகப்பெரிய பட்ஜெட்டில் மருதநாயகம் படத்தை உருவாக்க அப்போது இருந்த சூழலில் கமலால் முடியவில்லை, இங்கிலாந்து ராணி எலிசபெத் ராணி மற்றும் அன்றைய முதல்வர் கருணாநிதி ஆகியோர் மருதநாயகம் படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தனர். மருதநாயகம் படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தியது.

ஆனால் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து நடத்த முடியாமல் போனதற்கு காரணம் அப்போதே பல நூறு கோடி ரூபாய் என பெரிய பொருட்செலவில் இந்த படத்தை உருவாக்க கமல்ஹாசன் திட்டமிட்டும் முடியவில்லை. அதனால் இப்போது ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெற்று அதன் மூலம் மருதநாயகம் படத்தின் மிகப் பிரமாண்ட காட்சிகளை மிக சுலபமாக எடுக்கவும், பட்ஜெட்டை பாதியாக குறைத்து படத்தை முடிக்கவும் இந்த ஏஐ பயிற்சி பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையே வருகிற நவம்பர் 7ம் தேதி நடிகர் கமல்ஹாசனின் 70வது பிறந்தநாள் வருகிறது. இந்த பிறந்த நாளில் அவர் நடித்த தக்லைப் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று கூறப்பட்டது. அதேபோல் வருகிற பொங்கலுக்கு தக்லைப் படம் ரிலீஸ் ஆகும் என்றும் ஒரு தகவல் இருந்தது. ஆனால் இப்போது நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளில் நவம்பர் 7 அன்று, தக்லைப் படத்தின் டிரெய்லர், டீசர் எதுவுமே வராது என்பது உறுதியாக தெரிய வந்துள்ளது.

ஏனெனில் தக்லைப் படம், 2025ம் ஆண்டில் பொங்கலுக்கு வரவில்லை. அதையடுத்து ஏப்ரல் மாதத்தில்தான் ஸம்மர் ஸ்பெஷலாக ஏப்ரல் 10ம் தேதிதான் படம் திரைக்கு வருகிறது. இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே தக்லைப் படத்தின் டிரெய்லரை வெளியிட்டால் சரியாக வராது. ஏறக்குறைய 6 மாதங்களுக்கு முன்பே படத்தின் டிரெய்லர் வெளியிட வேண்டாம், அடுத்த ஆண்டில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் தக்லைப் படத்தின் டிரெய்லர் வெளியிடலாம் என்றும் இயக்குனர் மணிரத்னம் முடிவு செய்துள்ளார். அதனால் வருகிற நவம்பர் 7ம் தேதி கமல் பிறந்த நாளில் தக்லைப் படத்தின் போஸ்டர் ஒன்று மட்டும் வெளியாக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்