- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா படத்துக்கு இசையமைக்கப் போவது இசைஞானியே தான், அவரோட கதையை எழுதப் போறது இவரா? -...

இளையராஜா படத்துக்கு இசையமைக்கப் போவது இசைஞானியே தான், அவரோட கதையை எழுதப் போறது இவரா? – போடு வெடிய, புளியகொம்பா தான் புடிச்சிருக்காங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா ஒரு சகாப்தமாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள அவர், வாழ்க்கை ஒரு சரித்திரமாக மாறியிருக்கிறது. அதனால் அவரது வாழ்க்கை வரலாறு படமாகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்துக்கு இளையராஜாவே இசையமைக்கிறார். அவரது பயோபிக் படத்துக்கு அவரே இசையமைப்பது இளையராஜாவுக்கு மிகப்பெரிய அனுபவமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த படத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

- Advertisement -

அருண் மாதேஸ்வரன் சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் போன்ற படங்களை இயக்கிய வகையில், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதில் அதிரடி ஆக்சன் சண்டை காட்சிகளை எடுக்கக்கூடிய அவர், இளையராஜாவின் வாழ்க்கையை, அந்த வாழ்வியல் சார்ந்த உணர்வுகளை, இயல்பான முறையில் திரையில் கொண்டு வருவது சாத்தியமா, என்ற பலமாக கேள்வி சினிமா ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இளையராஜா கேரக்டரில் நடிக்கும் தனுஷ், டைரக்டர் செல்வராகவனிடம் பாடம் கற்றவர். அண்ணன் குருவாக இருந்து அவருக்கு நடிப்பில் சகல வித்தைகளையும் சொல்லி கொடுத்திருப்பதாலும், 50 படங்களில் நடித்த அனுபவமும் இளையராஜா கேரக்டரில், தனுஷ் வெற்றி பெற்று விடுவார். அதனால் தனுஷ் நடிப்பில் ரசிகர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

- Advertisement -

ஆனால் கதை, திரைக்கதையில், வசனங்களில் ஏதேனும் சொதப்பி விட்டால், இளையராஜா என்ற இசைஞானியை படமாக எடுத்து அவமரியாதை செய்தது போல ஆகி விடுமே என்றும் ரசிகர்கள் கவலைப்படுகின்றனர். அதனால் இளையராஜா கதையை நல்ல முறையில் திரைக்கதையாக கொண்டு வர வேண்டுமே என்பது இசைப்பிரியர்களின் வேண்டுகோளாக எழுந்துள்ளது. மாரி செல்வராஜ் சாய்ஸ்சில் இருந்தும், அருண் மாதேஸ்வரனுக்கு இளையராஜா வாய்ப்பு கொடுத்தது தவறு என்றும் சிலர் விமர்சிக்கின்றனர்.

இந்நிலையில், இளையராஜா பயோபிக் படத்தில் புதிய திருப்பமாக ஒரு தகவல் இப்போது வெளிவந்துள்ளது. அதாவது இளையராஜா படத்துக்கு திரைக்கதை எழுதப் போவது, அவரது நீண்ட கால நண்பரான நடிகர் கமல்ஹாசன்தான். அவர்தான் இளையராஜா பயோபிக் படத்தின் திரைக்கதையை எழுதுகிறார். ஏற்கனவே இளையராஜா குறித்த பல விஷயங்களை நேரில் அறிந்தவர், நீண்டகால நண்பர் என்ற முறையில் கமல்ஹாசனே அந்த திரைக்கதையை எழுதுவதால் அருண் மாதேஸ்வரன், டைரக்‌ஷன் பணியை மட்டுமே செய்ய இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்