- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல், அவங்களே அப்படி சொல்லிட்டாங்களா? -...

குட் பேட் அக்லி படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல், அவங்களே அப்படி சொல்லிட்டாங்களா? – அப்போ தியேட்டர்களில் அனல் பறக்கப் போகுது!

- Advertisement -

முன்பெல்லாம் மக்களுக்கு கருத்து சொல்லும் விதமாக சமுதாய உணர்வுகளை பிரபலிக்கும் விதமான படங்களை இயக்குவது இயக்குனர்களின் வழக்கமாக இருந்தது. அதுபோன்ற சிறந்த கதைகளை தேர்வு செய்து நடிக்கவே நடிகர்களும் ஆசைப்பட்டனர். ஆனால் இது எல்லாம் 30 40 முந்தைய ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் சினிமாவின் நிலை.

ஆனால் கமர்ஷியல் என்ற வட்டத்துக்குள் தமிழ் சினிமா வந்த பிறகு பெரும்பாலான படங்கள் ஹீரோவை மையப்படுத்தி ஹீரோயிசம் நிறைந்த படங்கள் மட்டுமே கதைகளாக்கி பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்படுகின்றன. ஒரு படம் தியேட்டரில் வெளியானால் அங்கு ஹீரோவை காட்டும்போது கரகோசம் விசில் சத்தம் பறக்கும் அளவுக்கு கதை திரைக்கதை ரசிக்கப்படுவது இல்லை.

அப்படி மாஸ் காட்டும் ஹீரோக்களில் ஒருவராக தான் தமிழ் சினிமாவில் நடிகர் அஜீத்குமாரும் இருந்து வருகிறார். ஆசை காதல் கோட்டை வாலி அவள் வருவாளா உன்னைத்தேடி என ஆரம்பத்தில் கதைகளை மையப்படுத்திய கதைகளில் நடித்த அஜீத்குமார் அதன்பிறகு ஒரு கட்டத்தில் ஹீரோயிசம் காட்டும் படங்களின் நாயகனாக மட்டுமே மாறியிருக்கிறார்.

அப்படித்தான் வேதாளம் வீரம் விவேகம் விஸ்வாசம் போன்ற பல படங்கள் வெளியாகின. இதில் கதை என்பது ஹீரோயிசத்துக்கு வெளியே தான் இருந்தது. அதே நேரத்தில் விடாமுயற்சி போன்ற தனது இமேஜை கெடுத்துக்கொள்ளும் படத்திலும் அஜீத்குமார் நடித்ததும் கவனிக்கத்தக்கது. ஒரு இயக்குனர் ஹீரோவை டேமேஜ் செய்த படம் இதுவாக தான் இருக்கும் என்ற விமர்சனங்களும் அந்த படம் ரிலீஸான போது எழுந்தது.

இந்த சூழலில் வருகிற ஏப்ரல் 10ம் தேதி குட் பேட் அக்லி படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே டீசர் வெளியாகி ஒரே நாளில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. அதன்பிறகு ஓஜி சம்பவம் பாடலும் வெளியாகி பெரிய அளவில் இணையத்தில் வைரலானது. இந்த வாரத்தில் செகன்ட் சிங்கிள் மற்றும் டிரெய்லர் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் குட் பேட் அக்லி படம் குறித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ரவிசங்கர் கூறியிருப்பதாவது, தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் என்ற சாதனையை குட் பேட் அக்லி படம் படைக்கும். இது என்னுடைய வார்த்தைகள் அல்ல, தமிழ்நாட்டில் உள்ள விநியோகஸ்தர்கள் சொன்ன வார்த்தைகள், என்று கூறியிருக்கிறார். இதனால் ஏகே ரசிகர்கள் ஏகப்பட்ட உற்சாகத்தில் இருக்கின்றனர்.

சற்று முன்