- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் லோகேஷ் கனகராஜூக்காக அப்படி ஒரு விஷயத்தை செய்ய காத்திருக்கும் விஜய் பட தயாரிப்பாளர் -...

இயக்குனர் லோகேஷ் கனகராஜூக்காக அப்படி ஒரு விஷயத்தை செய்ய காத்திருக்கும் விஜய் பட தயாரிப்பாளர் – இது வேற லெவல் சம்பவம்தான்!

- Advertisement -

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். கோவையில் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் குறும்படங்கள் இயக்கிய அனுபவத்தை கொண்டு யாரிடமும் உதவி இயக்குனராக பணி செய்யாமல் நேரடியாக மாநகரம் படத்தை இயக்கி பெரிய வெற்றியை கண்டவர்.

தொடர்ந்து கைதி விக்ரம் மாஸ்டர் லியோ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் துவங்கப்படுகின்றன. அடுத்து அவர் கார்த்தி நடிப்பில் கைதி 2 படத்தை டைரக்ட் செய்ய வாய்ப்புள்ளது.

இதற்கிடையே தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் எஸ் எஸ் லலித்குமார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் அவர் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை தயாரித்தார். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கினார். விமர்சன ரீதியாக தோல்வியடைந்த இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது.

அதன்பிறகு தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே என்ற லைக் படம் உருவாகி வருகிறது. பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்து வருகிறது. டிராகன் படத்தின் அபார வெற்றியால் லைக் படமும் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற வாய்ப்புள்ளது. நாம் தமிழர் கட்சி சீமான் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.

இந்த சூழலில் தயாரிப்பாளர் லலித்குமார் சென்னை கிளாம்பாக்கத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகில் பெரிய மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றை கட்டியுள்ளார். சகல வசதிகள் கொண்ட இந்த மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறப்பு விழாவை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வைத்துள்ள தயாரிப்பாளர் லலித்குமார், கூலி படத்தை தான் தனது தியேட்டரில் முதல் படமாக ரிலீஸ் செய்வது என்ற முடிவில் இருக்கிறார்.

வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் ரிலீஸாவதால் அதே நாளில் தனது மல்டிபிளக்ஸ் தியேட்டரின் திறப்பு விழாவையும் வைத்திருக்கிறார். ஒருவேளை கூலி படம் ரிலீஸ் தள்ளிப் போனால், அப்போது தியேட்டர் திறப்பு விழாவையும் தள்ளி வைத்து கூலி படம் ரிலீஸ் நாளில்தான், தியேட்டர் திறப்பு விழா என்றும் திட்டமிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் மீதுள்ள ஆழமான நட்பும் மீண்டும் அவரது இயக்கத்தில் ஒரு படம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ள தயாரிப்பாளர் லலித்குமார் இப்படி தனது விசுவாசத்தை காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்