மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். மலையாளத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்திருக்கிறார். பி வாசு இயக்கத்தில் ரஜினி பிரபு ஜோதிகா நடித்த படம் சந்திரமுகி. இந்த படம் மலையாளத்தில் இருந்து ரீ மேக் செய்யப்பட்ட ஒரு படமாக தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
சந்திரமுகி படத்தில் ஒரிஜினல் வெர்ஷன் மலையாளத்தில் இயக்கப்பட்ட மணிச்சித்ரதாழ் படம்தான். இந்த படத்தை காப்பியடித்துதான் பி வாசு சந்திரமுகி படத்தை இயக்கி இருந்தார். மணிசித்ரத்தாழ் படத்தில் மோகன்லால் சுரேஷ்கோபி ஷோபனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் இப்போதும் மலையாள சினிமா ரசிகர்கள் கொண்டாடும் கிளாசிக்கல் படமாக உள்ளது.
இந்த மணிசித்ரதாழ் படத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் ரஜினியும், சுரேஷ்கோபி கேரக்டரில் பிரபுவும் ஷோபனா கேரக்டரில் ஜோதிகாவும் தமிழில் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் நடிகர் மோகன்லாலும் நேரடியாக தமிழில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக நடிகர் கமலுடன் உன்னைப்போல் ஒருவன் விஜயுடன் ஜில்லா மற்றும் ரஜினியுடன் ஜெயிலர் படத்திலும் நடிகர் மோகன்லால் நடித்திருந்தார். இப்போது படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஜெயிலர் 2 படத்திலும் மோகன்லால் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கிய எல்2 எம்புரான் படமும் 2 தினங்களுக்கு முன் வெளியாகி ரூ. 100 கோடி வசூலை அள்ளியிருக்கிறது.
இதற்கிடையே எல்2 எம்புரான் படத்தில் 2002ம் ஆண்டில் நடந்த குஜராத் கலவர சம்பவத்தை மையப்படுத்திய விதத்தில் வகுப்புவாத பிரிவினையை தூண்டும்படியான சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் படத்தின் நாயகன் நடிகர் மோகன்லாலுக்கு வலதுசாரி ஆதரவாளர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ள நடிகர் மோகன்லால் அதில் கூறியிருப்பதாவது, எம்புரான் படத்தின் சில பகுதிகள் ரசிகர்கள் பலரது மனதை புண்படுத்தி உள்ளதாக அறிந்தேன். எந்த ஒரு அரசியல் கட்சி, கருத்தியல் மற்றும் மதத்துக்கு எதிரான வெறுப்பை உண்டாக்க கூடாது என்பது ஒரு கலைஞனாக என்னுடைய கடமையாகும். எனவே நானும் எம்புரான் படக்குழுவும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். மேலும் படத்தில் உள்ள அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளும் நீக்கப்படும் என்று நடிகர் மோகன்லால் கூறியிருக்கிறார்.





