- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் நடித்த போது இயக்குனர் மிஷ்கின் செய்த விஷயம், எனக்கு வேண்டாம் என்று உறுதியாக...

அந்த படத்தில் நடித்த போது இயக்குனர் மிஷ்கின் செய்த விஷயம், எனக்கு வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டேன் – வெளிப்படையாக பேசிய நடிகர் சிங்கம்புலி

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களால் அறியப்பட்டவர் சிங்கம்புலி, ஆனால் அவர் சூர்யா நடித்த மாயாவி, அஜீத்குமார் நடித்த ரெட் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாது. பிதாமகன் அவன் இவன் படங்களின் போது இயக்குனர் பாலாவுடன் இணை இயக்குனராக பணிசெய்திருக்கிறார். சுந்தர் சி இயக்கிய உன்னைத்தேடி படத்தின் கதை வசனகர்த்தா சிங்கம்புலிதான்.

முத்துக்கு முத்தாக மாயாண்டி குடும்பத்தார் மனம் கொத்திப் பறவை கருப்பன் உள்ளிட்ட பல படங்களில் காமெடி ரோலில் நடித்த சிங்கம்புலி, மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் கண் பார்வையற்ற கேரக்டரில் நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு நண்பராக நடித்திருப்பார். இதில் வித்யாசமான கெட்டப்பில் சிங்கம்புலி நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் சிங்கமுத்து கூறியதாவது, எனக்கு மனசு ஒரு மாதிரி இருந்துச்சுன்னா, மனசு வலிச்சதுன்னா நான் இயக்குனர் மிஷ்கினுக்கு போன் செய்வேன். உடனே எடுத்து பேசுவார். என்ன விஷயம் சொல்லுங்க என்பார். நான் சொன்ன பிறகு உடனே ஆபீஸ் வாங்க என்பார். நான் அவரை நேரில் பார்க்க போய் விடுவேன்.

மிஷ்கின் இயக்கத்தில் நான் சைக்கோ படத்தில் நடித்தேன். இதுவரைக்கும் ஒரு மாதிரி படங்களில் பண்ணிட்டீங்க, இந்த படத்தில் இப்படி பண்ணுங்கண்ணே என்று சொல்லிதான் சைக்கோ படத்தில் என்னை நடிக்க வைத்தார். என்னை கூட்டீட்டு போய் எனக்காகவே ஒரு லட்சம் 2 லட்சம் செலவு செய்து கோட் சூட் கேப் ஷூ எல்லாம் நிறைய வாங்கினார்.

- Advertisement -

அதை எல்லாம் என்னிடம் கொடுத்து, சைக்கோ படத்தில் நடிக்க வைத்தார். படப்பிடிப்பு முடிந்த பிறகு எல்லாத்தையும் நீங்களே அள்ளிட்டு போங்க என்றும் என்னிடம் சொன்னார். அப்படியே எல்லாத்தையும் பெட்டியில் போட்டு அண்ணனுக்கு கொடுத்துடுங்க என்றும் கூறிவிட்டார். எல்லாமே காஸ்ட்லி நீங்களே வெச்சுக்குங்க அண்ணே என்றும் என்னிடம் சொல்லி விட்டார்.

ஆனால் நான் அதில் இருந்து ஒரு பேண்ட் ஒரு டீசர்ட் ஒரு கேப் மட்டுமே எடுத்துட்டு மத்த எல்லாத்தையும் அவரிடமே திருப்பி கொடுத்து விட்டேன். அவர் புரடக்சன் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார். இது அவருக்கு யூஸ் ஆகும். இதை எல்லாம் எடுத்துட்டு போய் நான் என்ன செய்றது என்று சொல்லி திருப்பி கொடுத்து விட்டேன் என்று நடிகர் சிங்கம்புலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்