- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படம் ஓடிடி டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை, என்ன விலைக்கு போயிருக்கு தெரியுமா? - காலரை...

ஜனநாயகன் படம் ஓடிடி டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை, என்ன விலைக்கு போயிருக்கு தெரியுமா? – காலரை தூக்கி விட்டுக் கொள்ளும் தளபதி ரசிகர்கள்!

- Advertisement -

இளைய தளபதி பிறகு தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. ஏனெனில் விமர்சன ரீதியாக தோல்வியடையும் இவரது படங்கள் கூட வசூலில் பெரிய உச்சத்தை தொட்டு விடும். பைரவா பீஸ்ட் வாரிசு லியோ போன்ற படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அதாவது விஜய் படங்களை பொருத்த வரை டீன் ஏஜ் வயது ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பள்ளி கல்லூரி மாணவ மாணவியரில் பெரும்பாலானோர் விஜய் ரசிகர்கள்தான். அத்துடன் பேமிலி ஆடியன்ஸ் ரிபீட் ஆடியன்ஸ் விஜய் படத்துக்கு அதிகமாக வருகின்றனர். குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு விஜய் பாட்டு டான்ஸ் என்றால் கொண்டாட்டம்தான்.

ஆனால் அப்படி ஒரு உச்சத்தில் உள்ள நடிகர் விஜய், தனது கேரியரை அப்படியே அந்தரத்தில் விட்டு விட்டு இப்போது அரசியலுக்கு வந்திருக்கிறார். இது ஒரு வகையில் மக்கள் மீதான அவரது அக்கறை என்று எடுத்துக் கொண்டாலும் அவரது தீவிர ரசிகர்களுக்கு விஜய் தொடர்ந்து நடிக்காமல் சினிமாவை விட்டு விலகுவதில் பலத்த அதிருப்தியே உள்ளது.

அரசியலில் இருந்தாலும் நடிகர் விஜய் ஆண்டுக்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. 69 படங்களே போதும், அதையே திரும்ப திரும்ப பார்க்கும் அளவுக்கு பல படங்கள் தரமான சம்பவங்களாக உள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் விஜய் மீண்டும் நடிக்க வந்து விடுவார் என்றும் சில அரசியல் கட்சியினர் கலாய்த்து வருகின்றனர்.

இந்த சூழலில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படம் வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி 9ம் தேதி ரிலீஸாகிறது. அதற்கு முன்னதாக வருகிற ஜூன் 22ம் தேதி விஜய் பிறந்த நாளில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

இதற்கிடையே நடிகர் விஜய் பூஜா ஹெக்டே நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் ஓடிடி டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனையும் அமோகமாக நடந்து விட்டது. அமேசான் பிரைம் ஓடிடி தளம் ஜனநாயகன் படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ரூ. 115 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அதிக விலை தராத ஓடிடி நிறுவனங்கள், ரூ. 115 கோடி வரை அதிகவிலை கொடுத்து ஜனநாயகன் படத்தை வாங்கியிருப்பது தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. அதிக விலை கிடைத்ததால் ஜனநாயகன் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சற்று முன்