- Advertisement -
Homeபொழுதுபோக்குசுந்தர்சி - வடிவேலு இணைந்து நடித்த கேங்கர்ஸ் டிரெய்லர் வெளியீடு, பிடி மாஸ்டராக கிச்சுகிச்சு மூட்டும்...

சுந்தர்சி – வடிவேலு இணைந்து நடித்த கேங்கர்ஸ் டிரெய்லர் வெளியீடு, பிடி மாஸ்டராக கிச்சுகிச்சு மூட்டும் வடிவேலு – திரையில் மீண்டும் காமெடியில் ஜொலிப்பாரா?

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி படங்கள் என்றாலே காதல் காமெடி கவர்ச்சி என ஜாலியான ஒரு ஜானரில்தான் படம் இருக்கும். ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தை பொழுதுபோக்காக கொண்டு சென்று ரசிகர்களை கவலை மறக்க செய்பவர். இரண்டரை மணி நேரம் ஜாலியாக நேரத்தை கழிக்க சுந்தர் சி இயக்கிய படங்கள் என்றால் உத்தரவாதமே தரலாம்.

அந்த வகையில் ஆரம்பத்தில் சுந்தர் சி இயக்கிய வின்னர் ரெண்டு உள்ளிட்ட படங்களில் வடிவேலு காமெடி வேற லெவலில் இருந்தது. குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் தலைவராக கைப்புள்ள கேரக்டரில் வின்னர் படத்தில் வடிவேலு செய்த காமெடி இன்றும் சோஷியல் மீடியாவில் டிரண்டிங்கில் இருந்து வருகிறது.

- Advertisement -

அதே போல் ரெண்டு படத்தில் கிரிகாலன் மேஜிக் ஷோ நடத்தும் நடிகர் வடிவேலு, கரடியிடம் சிக்கிக் கொள்வதும் அதே கரடியிடம் மயில்சாமி சிக்கிக் கொள்வதும் ஆட்டோவை பார்ட் பார்ட் ஆக கழட்டி விற்கும் மாதவன், வடிவேலுவின் காமெடி காட்சிகள் இன்றும் ரசிக்க வைக்கின்றன. ரசிகர்களை சிரிக்க வைக்கின்றன.

அதே போல் தலைநகரம் படத்தில் இயக்குனர் சுந்தர் சி கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தில் நாய் சேகர் கேரக்டரில் வடிவேலு நடிப்பு தாறுமாறான காமெடி காட்சிகளாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் ஒரு கட்டத்தில் சந்தானம் யோகிபாபு சூரி என தனது படங்களில் காமெடி நடிகர்களை நடிக்க வைத்தார் சுந்தர் சி.

- Advertisement -

பல ஆண்டுகளாக சுந்தர் சி வடிவேலு கூட்டணி பிரிந்த நிலையில் இப்போது கேங்கர்ஸ் என்ற படம் மூலம் இருவரும் மீண்டும் இணைந்து உள்ளனர். இதில் விளையாட்டு ஆசிரியர் கேரக்டரில் நடிகர் வடிவேலு, கர்லிங் தலைமுடி கெட்டப்பில் வருகிறார். கேத்தரின் தெரசா முனிஷ்காந்த் விஸ்வநாதன் அருள்தாஸ் மைம்கோபி சந்தானபாரதி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

போலீஸ் அதிகாரியாக உள்ள சுந்தர் சி பிடி மாஸ்டராக வடிவேலு பிடி மாஸ்டராக உள்ள பள்ளிக்கு வருகிறார். அங்குள்ள கேத்தரின் தெரசாவை காதலிக்கிறார். கோடிக்கணக்கில் யாரோ மோசடி செய்த பணத்தை சுந்தர் சி மீட்பதுதான் கதை என்பது டிரெய்லர் காட்சிகள் மூலம் தெரிய வருகிறது. கேங்கர்ஸ் படம் வரும் 24ம் தேதி ரிலீஸாகிறது. வடிவேலுக்கு இந்த படம் கம்பேக் கொடுக்குமா, என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

கேங்கர்ஸ் டிரெய்லர் காண இங்கே கிளிக் செய்யவும்:https://youtu.be/7sx2CIUBiDY?si=cog1DjWW3KEqin_g

- Advertisement -

சற்று முன்