- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர், ஜெய் பீம் இயக்குனரை தொடர்ந்து லோகேஷ் படத்திலும் இதை ஃபாலோ செய்ய அழுத்தம் கொடுக்கிறாரா...

ஜெயிலர், ஜெய் பீம் இயக்குனரை தொடர்ந்து லோகேஷ் படத்திலும் இதை ஃபாலோ செய்ய அழுத்தம் கொடுக்கிறாரா ரஜினி… படம் ஹிட்டாக என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு…

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம், பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. சுமாரான கதையாக அது எழுதப்பட்டிருந்தாலும், சில மாஸ் காட்சிகள் இருந்ததும், பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருந்ததும் படத்தின் வெற்றிக்கு உதவியதாக சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல், ரஜினியுடன் கன்னட பிரபலம் சிவராஜ்குமார் மற்றும் மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோரும் இடம் பெற்றிருந்ததால், வெளி மாநில ரசிகர்களும் படத்தை வரவேற்றதாக விமர்சனங்கள் எழுந்தன. இதன் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் ரஜினிகாந்த் தனது அடுத்த பட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

- Advertisement -

ஏற்கனவே லைக்கா தயாரிப்பு நிறுவனத்துடன் அவர் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதில் ஒன்று அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படம். விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகியோர் முன்னணி நாயகர்களாக நடிக்கும் இந்த திரைப்படத்தில், ரஜினி மொய்தீன் கான் என்னும் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். இந்த திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாகிறது.

இதைத்தொடர்ந்து ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். திருவனந்தபுரம், திருநெல்வேலியில் நடைபெற்ற இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் மலையாள நடிகர் பகத் பாசில், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் ராணா, நடிகைகள் ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் இந்தி பிரபலம் அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் முதலில் முழுக்க முழுக்க தமிழ் நடிகர்களையே நடிக்க வைக்க ஞானவேல் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால் ரஜினிதான் ஜெயிலர் படத்தின் ஃபார்முலாவை இதிலும் பயன்படுத்த கூறினாராம். அதன் காரணமாகவே இந்தி மலையாளம் தெலுங்கு என மூன்று திரை உலகிலும் நடிகர் நடிகர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம். இப்படியான சூழ்நிலையில், லோகேஷின் அடுத்த படத்திலும் இதே பார்முலாவை கையில் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தலைவர் 171 ஆக உருவாகும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இதற்கான சூட்டிங் அடுத்த மார்ச் மாதம் தொடங்க இருக்கும் நிலையில், நடிகர் நடிகைகள் தேர்வில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம். இதில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க கன்னட இயக்குனரும் நடிகருமான துனியா விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இது மட்டும் நடந்தால், ரஜினி படத்தில் பிற திரை உலகை சேர்ந்த நடிகர்கள் இடம் பெறுவது மூன்றாவது முறையாக நடக்கும் என பலர் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்