நடிகர் ஜீவன், தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் அவரது நடிப்பும், உடல்மொழியும், வசன உச்சரிப்பும் தனிதான். வில்லத்தனமாக நடித்தாலும் அவரை எல்லாத் தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும். நிறைய படங்களில் அவர் நடிக்காவிட்டாலும், சில படங்களிலேயே அவர் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை, வரவேற்பை பெற்றுவிட்டார்.
காக்க காக்க படத்தில், சூர்யாவை கதிகலங்க வைக்கும் வில்லனாக ஜீவன் நடித்திருந்தார். அடுத்து திருட்டுப்பயலே படத்தில், வீடியோ டேப்பை வைத்துக்கொண்டு, படத்தின் நாயகி மாளவிகாவை மிரட்டிக்கொண்டே இருப்பார். வேலைக்கார பெண் சோனியா மீது காதல் கொள்வார். மிரட்டலான நடிப்பை தந்திருந்தார்.
அடுத்து, நான் அவன் இல்லை படத்தில் பெண்களை ஏமாற்றி பணம், நகைகளை பறிக்கும் மோசடி காதல் மன்னன் கேரக்டரில் மிக சிறப்பாக நடித்திருப்பார். சிநேகா, நமீதா, கீர்த்தி சாவ்லா, மாளவிகா, ஜோதிர்மயி உள்ளிட்டோரை ஏமாற்றிவிட்டு, நான் அவன் இல்லை, என் பெயர் அண்ணாமலை என, கோர்ட்டில் கடைசி வரை வாதாடி அனைவரையும் நம்ப வைப்பார். நான் அவன் இல்லை 2ம் பாகம் வந்தது. ஆனால், பெரிய வரவேற்பை பெறவில்லை.
தமிழ் சினிமாவில் நடிப்பில் அசகாய சூரனாக வலம்வந்த ஜீவன், கடந்த பல ஆண்டுகளாக நடிக்காமல், சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி 171 படத்தில், நடிகர் ஜீவனை முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க வைக்க கமிட் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஜீவன் எந்த கேரக்டராக இருந்தாலும், அல்வா சாப்பிடுவது போல மிக எளிதாக, தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி அசத்தி விடுவார். அதனால் ரஜினி படத்திலும் அதை கண்டிப்பாக ஆனால் அதே நேரத்தில் நடிகர் ஜீவனிடம் ஒரு வில்லங்கமாக விஷயம் உண்டு. அவர் எல்லா விஷயங்களிலும் ஜோசியத்தை நம்புபவர். ஒரு நாளில் அவரது செயல்பாடுகளை எல்லாம் ஜோசியம் பார்த்தே தீர்மானம் செய்பவராம்.
தமிழ் சினிமாவில் அவர் பெரிய அளவில் வெற்றி பெறாததற்கு காரணமே இந்த ஜோசியம் பார்க்கும் பழக்கம்தான். அதனால் பல படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஜோசியம் பார்த்தே மறுத்து விட்டாராம். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட ஜீவன், ரஜினி படத்தின் படப்பிடிப்பில் எப்படி நடந்துக் கொள்வாரோ, ஜோசிய கட்டங்களை பார்த்து, குழம்பி விடுவாரோ, ரஜினியை மூடு அவுட் பண்ணி விடுவாரோ என்பதுதான் கேள்வியாக எழுந்துள்ளது.





