- Advertisement -
Homeபொழுதுபோக்குகண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா... ஒரே நாளில் இரண்டு முத்தான அப்டேட்... குட் பேட்...

கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா… ஒரே நாளில் இரண்டு முத்தான அப்டேட்… குட் பேட் அக்லி படக்குழுவின் குட் ஆன மூவ்…

- Advertisement -

அஜித் குமாரின் குட் பேட் அட்லி திரைப்படம் வெளியாக இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. இவரது முந்தைய திரைப்படமான விடாமுயற்சி அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. மாஸ் காட்சிகள் இல்லாதது அஜித் ரசிகர்களுக்கே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒட்டுமொத்தமாக விடா முயற்சி அதிருப்தியை மட்டுமே சம்பாதித்தது.

இதனால் நொந்து போன அஜித் ரசிகர்கள் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தை பெரிய அளவில் நம்பி உள்ளனர். நிச்சயம் இந்த திரைப்படம் தங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று அவர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான்.

- Advertisement -

தன்னை தீவிர அஜித் ரசிகராக காட்டிக் கொள்ளும் அவர், ஒவ்வொரு மேடையிலும் அதை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது அவரது கனவு நிறைவேறி இருக்கும் சூழலில், ஒரு ரசிகனின் கண்ணோட்டத்திலேயே அந்த திரைப்படத்தை அவர் எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதி செய்யும் வகையிலேயே குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர் அமைந்தது. அதில் அஜித் குமாரை தவிர வேறு எந்த ஒரு விஷயத்தையும் காண்பிக்கவில்லை. பழைய திரைப்படங்களில் அஜித் பேசிய வசனங்களும், அவரது மேனரிசங்களும், தோற்றங்களையும் மட்டுமேதான் ஆதிக் அதில் வெளிகாட்டி இருந்தார். அப்போதே இது ரசிகர்களுக்கான படம்தான் என்பது தெளிவாகிவிட்டது.

- Advertisement -

படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அண்மையில் இதிலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகின. ஆனால் இது அஜித் ரசிகர்களை கவர்ந்த அளவுக்கு மற்றவர்களிடம் பெரிய அளவு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று தான் கூற வேண்டும். இருப்பினும் பின்னணி இசையில் ஜிவி பிரகாஷ் வெளுத்து வாங்கி இருப்பது அதன் டீசரிலேயே தெரிய வந்தது.

திரிஷா அர்ஜுன் தாஸ் பிரபு யோகி பாபு பிரசன்னா சுனில் என ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கும் இந்த திரைப்படத்தில் சிம்ரனும் கேமியோ ரோலில் வருகிறார். படத்திற்கான முன்பதிவு இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. அதுமட்டுமல்ல ட்ரெய்லரையும் இன்று வெளியிட படக் குழு முடிவு செய்துள்ளது. அதன்படி இரவு 9 மணிக்கு முன்னோட்டம் வெளியிடப்படுகிறது. ஒரே நாளில் இரண்டு விஷயங்கள் நடப்பதால் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்