அமரன் திரைப்படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு ஏ ஆர் முருகதாஸ் உடன் கை கோர்த்தார் சிவகார்த்திகேயன். இதற்கு மதராசி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இதன் டீசரும் வெளியாகி இருந்தது.
கஜினி திரைப்படத்தை போன்று சிவகார்த்திகேயனுக்கும் இதில் வித்தியாசமான ரோல் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே தொடங்கிய இதன் படப்பிடிப்பு இன்னும் முடிவடையவில்லை. நடுவே சல்மான்கானை இயக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டதால் முருகதாஸ் இந்த திரைப்படத்தின் பணிகளில் நிறுத்திவிட்டு அங்கு சென்றார்.
சிக்கந்தர் என்னும் பெயரில் உருவான அந்த திரைப்படம் தற்போது வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதனால் மதராசி திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி இன்னும் எடுக்கப்படாமல் உள்ளது. இதன் நடுவே தனது 25வது திரைப்படம் ஆன பராசக்தியில் கவனம் செலுத்த சென்று விட்டார் சிவகார்த்திகேயன்.
இதில் அவருடன் ரவி மோகன் அதர்வா ஸ்ரீலிலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரிக்கு அருகே இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து காரைக்குடி, சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்தினார் இயக்குனர் சுதா கொங்கரா. தொடர்ந்து இலங்கையிலும் சூட்டிங் நடத்தப்பட்டது.
படம் 1960களில் நடக்கும் கான்செப்ட் என்பதால், நீராவி எஞ்சின் ரயில் தொடர்பான செட் அப் தேவைப்பட்டிருக்கிறது. இது இலங்கையில் இருப்பதால்தான் அங்கு பட குழுவினர் சென்றனர். 20 நாட்கள் அங்கு சூட்டிங் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட இருந்த நிலையில் தற்போது அது தடைப்பட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.
அதற்கான பல்வேறு காரணங்களும் சினிமா விமர்சகர்களால் அடுக்கப்படுகின்றன. அதாவது சுதாவின் செயல்பாடுகள் படக் குழுவில் உள்ள சிலருக்கு பிடிக்கவில்லை என்று சொல்கிறார்கள். சிவகார்த்திகேயனுக்கும் அது அதிருப்தியை தான் ஏற்படுத்தி இருக்கிறதாம். குறிப்பாக ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரனுக்கும் இதே மனநிலை என்று சொல்லப்படுகிறது. இதனால் அவர் படப்பிடிப்புக்குச் செல்ல ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள். படத்தை தயாரிக்கும் டான் நிறுவனமும் இன்னும் பணத்தை விடுவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இப்படி பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தடை பட்டதற்கு காரணங்கள் அடுக்கப்பட்டு வருவது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.





