நடிகர் விஜய் இப்போது, வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து, அவர் தனது 69 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டைரக்டர் எச் வினோத் டைரக்ட் செய்கிறார். வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் 69வது படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த படத்தை முடித்து விட விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையே கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு சக்கை போடு போட்டு வருகிறது. 20 கோடி ரூபாய்க்கு மேல், உலகம் முழுவதும் வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டைரக்டர் தரணி, தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம், படத்தை விநியோகம் செய்த சக்திவேல் ஃபிலிம் பேக்டரி விநியோகஸ்தர் சக்திவேல் ஆகியோர் நடிகர் விஜயை நேரில் சந்தித்தனர்.
அப்போது மிகப்பெரிய ரோஜா மாலையை நடிகர் விஜய்க்கு அணிவித்தனர். அப்போது டைரக்டர் தரணி, தயாரிப்பாளர் ஏஎம் ரத்தினம், வினியோகஸ்தர் சக்திவேல் ஆகியோர் விஜயிடம் பேசினர். அப்போது, தமிழகத்தில் ரி ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி படத்துக்கு, தியேட்டர்களில் கிடைத்துள்ள ஆரவாரமான வரவேற்பு, சிலிர்ப்பை தருகிறது தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக, ரசிகர்களின் சந்தோஷத்துக்காக ஆண்டுக்கு நீங்கள் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று விநியோகிஸ்தர் சக்திவேல் விஜயிடம் கேட்டுக் கொண்டார்.
அதற்கு விஜய் தலையை மட்டும் அசைத்து சிரித்தார். அவர் அதை ஆமோதித்ததாகவே ரசிகர்கள் தரப்பில் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நடிகர் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஏகோபித்த விருப்பமாக இருக்கிறது. அதே நேரத்தில் அவரது அரசியலில் முழுமூச்சாய் இறங்கிவிட்டால் சினிமாவில் நடிக்க முடியாது என்ற எண்ணத்தில் இருக்கிறார்.
ஆனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த விருப்பமாக நானும் ஒரு ரசிகனாக சொல்கிறேன் என்று குறிப்பிட்டே அந்த கோரிக்கையை சக்திவேல் அங்கு தெரிவித்தார். கில்லி படத்தின் டைரக்டர் தரணி, நடிகர் விஜயை நேரில் சந்தித்த மூன்று முறை முயற்சித்துள்ளார். ஆனால் அப்போதெல்லாம் தரணி, விஜயை சந்திக்க அனுமதிக்கவில்லை.
ஆனால் இப்போது கில்லி படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், தரணி விஜயை சந்தித்துள்ளார். முதலில் சந்தித்தால் மீண்டும் தனது இயக்கத்தில் நடிக்க டேட் கேட்பார்களே என்று விஜய் யோசித்து சந்திக்க மறுத்து இருக்கலாம். ஆனால் இப்போது இன்னும் ஒரே ஒரு படத்தில் தான் விஜய் நடிக்க உள்ளார். அதுவும் டைரக்டர் முடிவாகி விட்டார் என்ற நிலையில், இந்த முறை கில்லி பட டைரக்டர் தரணி, தன்னை நேரில் சந்திக்க விஜய் அனுமதித்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது





