- Advertisement -
Homeபொழுதுபோக்குஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்காக நான் செய்த அந்த விஷயம்தான் தவறாக போய்விட்டது... இதுவரை வெளியாகாத...

ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்காக நான் செய்த அந்த விஷயம்தான் தவறாக போய்விட்டது… இதுவரை வெளியாகாத உண்மையை கூறிய செல்வராகவன்….

- Advertisement -

தமிழ் சினிமாவில் செல்வராகவனுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இங்கு இருக்கிறது. சொல்லப்போனால் 90ஸ் கிட்ஸ் களின் ஆதர்சன இயக்குனர் செல்வராகவன்தான். தனுசும் செல்வராகவனும் இணைந்து கொடுத்த அத்தனை திரைப்படங்களும் ரசிகர்களிடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இருவர் கூட்டணியில் முதன் முறையாக வெளிவந்த திரைப்படம் காதல் கொண்டேன்.

தனுசுக்கு அது இரண்டாவது படம். இயக்குனராக அவரது அண்ணன் செல்வராகவனுக்கு முதல் படம். ஆனால் இது எதுவுமே இல்லாமல் முதிர்ச்சியாக அந்த திரைப்படத்தை எடுத்துக் காட்டி இருப்பார் இயக்குனர் செல்வராகவன். அதற்குப் பக்க பலமாக நடித்து அசத்தியிருப்பார் அவரது தம்பி தனுஷ். அந்த ஒரு திரைப்படத்திலேயே தான் எவ்வளவு பெரிய நடிகன் என்பதை தனுஷ் நிரூபித்து இருப்பார்.

- Advertisement -

தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் வெளியான புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதே போல் 7ஜி ரெயின்போ காலனி இப்போது வரை ரசிகர்களுக்கு பிடித்தமான காதல் காவியங்களில் ஒன்றாக விளங்குகிறது. செல்வராகவன் கூட்டணியில் யுவன் சங்கர் ராஜாவுக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

2007 ஆம் ஆண்டு செல்வராகவன் கார்த்தி ஜிவி பிரகாஷ் கூட்டணியில் எடுக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தை நாம் அவ்வளவு எளிதில் கடந்து விட்டு போக முடியாது. ஆனால் அந்த திரைப்படம் வெளியான சமயத்தில் அது கலவையான விமர்சனத்தையே பெற்றது. சொல்லப்போனால் இரண்டாம் பாதி நன்றாக இல்லை என்று பலரும் கூறி வந்தனர். சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் மோதல் போக்கான வரலாற்றை தான் அதில் கூறியிருப்பார் செல்வராகவன்.

- Advertisement -

ஆனால் தற்போது ஆயிரத்தில் ஒருவனை கொண்டாட ஆட்களே இல்லை என்று கூறலாம். செல்வராகவன் எங்கு சென்றாலும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான் பலரும் கேட்டு வருகிறார்கள். இப்படியான சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான போஸ்டரை வெளியிட்டார் செல்வராகவன். தனுஷ் நடிப்பதாக அதில் அறிவிக்கப்பட்டது. ஆனால் போஸ்டரோடு இந்த கதை நின்று விட்டது. இது குறித்து தற்போது செல்வராகவன் விளக்கம் அளித்திருக்கிறார்.

அதில், நாங்கள் செய்த பெரிய தவறு போஸ்டரை முன்கூட்டியே அறிவித்தது தான். நிச்சயமாக ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை கார்த்தி இல்லாமல் செய்ய முடியாது. அதேபோல் படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட் ஒன்று இருக்கிறது. அதற்கு ஏற்ற தயாரிப்பாளர் முதலில் கிடைக்க வேண்டும். பிறகு நடிகர்களுக்கு ஒரு வருட கால்ஷீட் வேண்டும். இதனை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளது என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்