- Advertisement -
Homeபொழுதுபோக்குஷங்கர் இயக்கத்தில் நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார், காரணம் இதுதானாம் - முதல்வன் படத்துக்கு பின்னால்...

ஷங்கர் இயக்கத்தில் நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார், காரணம் இதுதானாம் – முதல்வன் படத்துக்கு பின்னால் இத்தனை சம்பவங்களா? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் ஜெண்டில்மேன் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். தொடர்ந்து முதல்வன் காதலன் பாய்ஸ் ஜீன்ஸ் அந்நியன் இந்தியன் சிவாஜி ரோபோ என பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 கேம் சேஞ்சர் என 2 படங்களும் போதிய வரவேற்பை பெறவில்லை.

அந்த காலத்திலேயே பிரமாண்ட இயக்குனர் என பெயர் வாங்கிய ஷங்கர் இதுவரை 30 ஆண்டுகளில் 15 படங்கள் மட்டுமே டைரக்ட் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் நடிகர் அர்ஜூன் நடித்த முதல்வன் படம் ஷங்கர் இயக்கிய படங்களில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படமாகும். இதில் ரகுவரன் தமிழக முதல்வர் அரங்கநாதன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

- Advertisement -

முதல்வன் படத்தில் மனிஷா கொய்ராலா மணிவண்ணன் விஜயகுமார் லைலா வடிவேலு கொச்சின் ஹனீபா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். டிவி சேனல் செய்தியாளர் புகழேந்தி, ஒரு நாள் முதல்வராக மாறி, பிறகு தமிழ்நாட்டுக்கு நிரந்தர முதல்வராவதுதான் இந்த படத்தின் கதை. படத்தில் அரசியல் காட்சிகள், சுஜாதாவின் அரசியல் வசனங்கள் அனல் பறந்தன.

இந்த படத்தில் நாயகனாக நடிக்க முதலில் இயக்குனர் ஷங்கர் அணுகிய நடிகர் ரஜினியை தான். ஆனால் தமிழ்நாட்டின் முதல்வராக கருணாநிதி இருந்த அந்த காலகட்டத்தில், முதல்வர் கேரக்டரில் நடிக்க ரஜினிகாந்த் மறுத்து விட்டார். அது முதல்வர் கருணாநிதிக்கு நான் பேசுவது போல் ஆகிவிடும் என்று ரஜினி அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

- Advertisement -

முதல்வன் படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் பின்பு ஷங்கர் இயக்கத்தில் சிவாஜி எந்திரன் ரோபோ 2.0 ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து முதல்வன் படத்தில் நடிக்க நடிகர் கமலை அணுகிய போது, அவர் ஹேராம் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் கால்ஷீட் பிரச்னை காரணமாக அந்நியன் படத்தில் நடிக்க முடியாமல் போனது. பிறகு முதல்வன் படத்தில் நடிகர் விஜயும் நடிக்க மறுத்தார்.

இந்நிலையில், தனது முதல் பட நாயகன் அர்ஜூனையே மீண்டும் முதல்வன் படத்தில் நாயகனாக்கினார் இயக்குனர் ஷங்கர். இந்த படத்தில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது மீனா தான். ஆனால் அவர் ரிதம் படத்தில் அர்ஜூன் நடித்ததால் மீண்டும் அவரே நடித்தால் சரியாக வராது என்பதால் மனிஷா கொய்ராலபாவை நாயகியாக நடிக்க செய்திருக்கிறார் ஷங்கர். கடந்த 1999ம் ஆண்டில் வெளியான இந்த படம் இன்று வரை ரசிகர்கள் விரும்பும் படமாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்