மனிதர்கள் தங்களது வாழ்க்கையில் கடந்து வந்த வாழ்க்கையை கடந்த காலத்தில் வாழ்ந்த அந்த நினைவுகளை அசைபோட்டு பார்ப்பது என்பதே அலாதியான ஒரு சோகம்தான். மகிழ்ச்சி துன்பம் என இரண்டு நிலைகளை மாறி மாறி கடந்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் திரும்பிப் பார்க்கும் போது எல்லாமே வெறும் நினைவுகளாக மட்டுமே மனதில் நிறைந்திருக்கும்.
அதுவும் பள்ளி கல்லூரி நாட்களில் வாழ்ந்த வாழ்க்கை என்பது ஒருவரது வாழ்க்கையில் பசுமையான நினைவுகளாக தங்கி விடும். எப்போதுமே ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் மிகவும் பொக்கிஷமாக கருதுவது பள்ளி, கல்லூரிகளில் நடித்த அந்த நாட்களைதான் என்பதும் கவனிக்கத்தக்கது.
ஏனெனில் இளமை துளிர்விடும் அந்த வயதில் எதையும் அறியும் ஆர்வத்தில் பயமறியாத ஒரு துடிப்பில் காதல் வசப்படும் அந்த நிலையில் அரும்பு மீசை துளிர்க்கும் அந்த வயதில் ஏற்படும் முதல் காதலும் நேசமும் நட்பும் உலகம் பற்றிய புரிதலும் பெரிய மாற்றங்களை, மனதில் உருவாக்கி ஒரு பரவசத்தை தந்து விடுகிறது.
அந்த வகையில் இயக்குனர் சேரன் இயக்கத்தில் பள்ளி கல்லூரி வாழ்நாட்களை மையப்படுத்திய ஒரு காதல் காவியம்தான் ஆட்டோகிராப் படம். கடந்த 2004ம் ஆண்டில் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மல்லிகா கோபிகா சினேகா கனிகா இளவரசு பெஞ்சமின் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது.
ஆட்டோகிராப் படத்தை இயக்குனர் சேரனே சொந்தமாக தயாரித்து டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் செந்தில் என்ற கேரக்டரில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இப்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை புதுப்பொலிவுடன் ரி ரிலீஸ் செய்ய உள்ளதாக ஏற்கனவே இயக்குனர் சேரன் ஏஐ தொழில்நுட்பத்தில் டிரெய்லர் வெளியிட்டு இருந்தார்.
ஆட்டோகிராப் படம் மூன்று தேசிய விருதுகளை பெற்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடல் எழுதிய கவிஞர் பா விஜய், பாடலை பாடிய பாடகி சித்ரா ஆகியோருக்கும் தேசிய விருது கிடைத்தது. இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப் படமாகும். வருகிற மே மாதம் 16ம் தேதி ஆட்டோகிராப் படத்தை ரி ரிலீஸ் செய்யப்படுகிறது என, இயக்குனர் சேரன் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.





