- Advertisement -
Homeபொழுதுபோக்குடிடி ரிட்டன்ஸை தொடர்ந்து கிக் ஏற்ற வரும் சந்தானம்... இந்த மாதமே அடுத்த படம் ரிலீஸாம்......

டிடி ரிட்டன்ஸை தொடர்ந்து கிக் ஏற்ற வரும் சந்தானம்… இந்த மாதமே அடுத்த படம் ரிலீஸாம்… வெற்றியை தக்க வைப்பாரா நகைச்சுவை நாயகன்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியவர் சந்தானம். கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்த சந்தானம், அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்தார். இருப்பினும் முழு நேர கதாநாயகனாக அவர் அறிமுகமானது வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில்தான். தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஓரளவு வரவேற்பை பெற்றது.

நகைச்சுவை கதாபாத்திரத்தை விட்டுவிட்டு, கதாநாயகனாக சந்தானம் அந்தஸ்து பெற்றாலும், அவருக்கே உரித்தான காமெடியை விடவில்லை. ஹீரோவாக பொறுப்பேற்று அவர் நடித்த அனைத்து திரைப்படத்திற்கும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்தார் சந்தானம். நடிகரின் இந்த முடிவு, அவரின் சில படங்களுக்கு கை கொடுத்தது.

இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் சந்தானத்திற்கு நல்ல வரவேற்பையே கொடுத்தன. ஏ ஒன், பாரிஸ் ஜெயராஜ் போன்ற திரைப்படங்களும் சந்தானத்தின் கேரியரில் மிக முக்கிய திரைப்படங்களாய் அமைந்தன. கதாநாயகனாக அவர் நடித்தாலும், மாறன், ரெடின் கிங்ஸ்லி, தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலகலப்பூட்டி படத்தை ரசிக்கச் செய்தனர்.

ஹீரோவாக சந்தானம் நடித்த திரைப்படங்களில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சிகளே அவருக்கு பக்கபலமாக அமைந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான சந்தானம் திரைப்படங்களில் பெரியளவு நகைச்சுவை கை கொடுக்காததால், அவர் படங்கள் படுதோல்வியை சந்தித்தன. ஏஜென்ட் கண்ணாயிரம், குலு குலு, சபாபதி, பிஸ்கோத், டகால்டி போன்ற திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் மாயமாகின.

சந்தானம் மீண்டும் நகைச்சுவை ரோலுக்கே திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்த நேரத்தில் வெளியான, டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் சந்தானத்திற்கு பெரிதும் கை கொடுத்தது. முனீஸ் காந்த், பெப்சி விஜயன், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், தங்கதுரை, மாறன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்த திரைப்படத்தில், சுவாரசியமான கதையும், திகட்டாத காமெடியும் இருந்ததால் படம் வெற்றி பெற்றது.

சந்தானத்திற்கு திருப்புமுனையாக அமைந்திருக்கும் இந்த திரைப்படம், வசூலை வாரி குவித்துள்ளது. இந்த நிலையில், சந்தானத்தின் அடுத்த திரைப்படமான கிக் இந்த மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. கன்னட இயக்குனர் பிரசாந்த்ராஜ் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில், கூல் சுரேஷ், ஒய் ஜி மகேந்திரன், செந்தில், மன்சூர் அலிகான், தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏற்கனவே இதன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், படமும் இந்த மாதம் ரிலீஸ் ஆவதால், சந்தானத்திற்கு அடுத்த வெற்றி கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

சற்று முன்