- Advertisement -
சமீபத்தில் இயக்குனர் பேரரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் தனுஷ் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர்கள் ஆசைக்காக அரசியலுக்கு வராதீர்கள். ஆசைக்கு கட்சி தொடங்கி மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் அவர்களை நேசிக்க வேண்டும் என்று பேரரசு கூறியிருந்தார். நடிகர் விஜய் நடித்த சிவகாசி திருப்பாச்சி என்ற 2 படங்களை இயக்கிய பேரரசு, அந்த விசுவாசத்தில் நடிகர் விஜய்க்கு மட்டும் ஜால்ரா அடிக்கிறார். தனுஷ்க்கு மட்டும் எதிர்ப்பை காட்டுகிறார் என்று பேரரசுவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.





