- Advertisement -
Homeபொழுதுபோக்குஅல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை, இயக்குனர் ராஜமவுலிதான் முட்டுக்கட்டை போட்டாரா -...

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த பாலிவுட் நடிகை, இயக்குனர் ராஜமவுலிதான் முட்டுக்கட்டை போட்டாரா – இது என்னப்பா புது பஞ்சாயத்து?

- Advertisement -

புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களில் அபார வெற்றிக்கு பிறகு ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் நடிக்கும் அவரது 22வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் அட்லி டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜூனுக்கு சம்பளம் ரூ. 250 கோடி என்றும் இயக்குனர் அட்லிக்கு சம்பளம் ரூ. 100 கோடி என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்க இயக்குனர் அட்லி திட்டமிட்டுள்ளார். அதனால் உலகம் முழுவதும் அறிந்த பிரபல பாலிவுட் நடிகையாக ஒருவரை நடிக்க வைக்க அட்லி திட்டமிட்ட நிலையில் நடிகை பிரியங்கா சோப்ராவை இந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சி நடந்துள்ளது. அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மேலும் அவர் திருமணத்துக்கு பின் 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்திருப்பதும், இப்போது தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கும் ஒரு படத்திலும் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ராஜமவுலி டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா சம்பளம் ரூ. 30 கோடி என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ராஜமவுலி இயக்கும் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கும் பிரியங்கா சோப்ரா, இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கும் ஜோடியாக நடித்தால் இந்தி தெலுங்கு தமிழ் என அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் படம் பெரிய அளவில் கவனத்தை ஈர்க்கும் என்பதால், அவரை இந்த படத்தில் நடிக்க வைக்க அட்லி முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என நடிகை பிரியங்கா சோப்ரா நோ சொல்லிவிட்டார். இது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் அட்லி நடிகர் அல்லு அர்ஜூன் போன்றோருக்கு பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது. ஆனால் இதற்கு முக்கிய காரணம், இயக்குனர் ராஜமவுலிதான் என்ற தகவலும் இப்போது வெளியாகி உள்ளது.

மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் பிரியங்கா சோப்ராவை நடிக்க கமிட் செய்யும்போதே, ஷூட்டிங்குக்கு அழைக்கும் நாட்களில் தவறாமல் வரவேண்டும் என்று இயக்குனர் ராஜமவுலி ஒப்பந்தம் போட்டிருக்கிறார். மேலும் இந்தியில் கிரிஷ் 4 என்ற படத்திலும் நடிக்க பிரியங்கா சோப்ரா ஏற்கனவே கமிட் ஆகியிருக்கிறார். அதனால் அல்லு அர்ஜூன் படத்துக்கு நோ சொல்லி இருக்கிறார். அதனால் இதுவரை அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக நடிக்காத புதுமுக நடிகைகளை இயக்குனர் அட்லி தேடி வருகிறார்.

சற்று முன்