- Advertisement -
Homeபொழுதுபோக்குநோக்கம் என்னவோ சரியான தான் இருக்கு, ஆனா நீங்க போன ரூட்டு சரியில்லையே… சார்...

நோக்கம் என்னவோ சரியான தான் இருக்கு, ஆனா நீங்க போன ரூட்டு சரியில்லையே… சார் படம் குறித்து விமர்சித்த பிரபலம் – என்ன இப்படி சொல்லிட்டாரு?

- Advertisement -

மெட்டிஒலி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் போஸ் வெங்கட். அதன் பிறகு சிவாஜி, தேவராட்டம், தலைநகரம், கவண் உள்ளிட்ட பல படங்களில் போஸ் வெங்கட் நடித்திருக்கிறார். சிறந்த குணசித்திர நடிகராக தன்னை வெளிப்படுத்தியவர். கன்னிமாடம் என்ற படத்தை இயக்கிய நடிகர் போஸ் வெங்கட், 2வது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சார்.

சார் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். விலங்கு வெப் சீரிஸ் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ள நடிகர் விமல், சார் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். கடந்த மாதத்தில் விமல் நடிப்பில் போகுமிடம் வெகுதூரம் இல்லை என்ற படமும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

- Advertisement -

நேற்று சார் படம் வெளியான நிலையில், அந்த குறித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, நம் சமுதாயத்தில் அனைவரும் ஒற்றுமையாக ஏற்றத்தாழ்வு இல்லாமல் வாழ வேண்டுமென்றால் ஒரே வழி அனைவரும் கல்வி கற்பது மட்டும்தான். இப்படியான கல்வியை கற்க தடையாக கடவுளே வந்தாலும் அந்த கடவுளை போட்டுத் தள்ளிவிட வேண்டும் என்று ஆழமான கருத்தை சொல்ல வந்த படம் தான் சார் படம்.

ஒரு ஊரில் ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கி ஒடுக்கி வைத்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களை கல்வி கற்கக் கூடாது என்கின்றனர். இப்படியான ஊரில் ஒருவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி கொடுக்கிறேன் என ஒருவர் வருகிறார். அவரது முயற்சியால் பல தடைகளுக்கு பின்னர் அந்த ஊரில் அவர் தொடக்கப்பள்ளி கட்டப்படுகிறது. இதன் மூலம் கல்வி கற்றுக் கொடுக்கிறார். அதன் பின்னர் அவரது மகன் சரவணன் வந்து அந்த பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்றுகிறார்.

- Advertisement -

அதன் பின்னர் விமல் அதை மேல்நிலைப் பள்ளியாக மாற்ற முயற்சிக்கிறார். விமல் ஆசிரியராக பணியாற்றவுடன் கல்வியின் மகத்துவத்தை எடுத்துக் கூறுவார் என்று பார்த்தால் காதலித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் எதற்காக காதலி என்றே தெரியவில்லை. முதலில் பொறுப்பற்றவராக இருந்த விமல் அதன் பின்னர் தனது நோக்கத்தை புரிந்து கொண்டு தீவிரமாக செயல்படுகின்றார்.

மூன்று தலைமுறைகளாக ஒரு குடும்பம் ஒரு ஊருக்கு கல்வி சொல்லிக் கொடுக்கின்றது. ஆனால் அந்த குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் குடும்பத்திற்கு ஆதரவாக யாரும் வரமாட்டார்கள். அதேபோல் இவர்களால் நான் கல்வி கற்று உயர்ந்து விட்டேன் என்று படத்தில் யாருமே கூறவில்லை. கல்வி கற்க தடையாக இருக்கின்றது சிறு தெய்வங்களான குல தெய்வங்களை காட்டியுள்ளனர். நோக்கம் சரியாகத்தான் உள்ளது. ஆனால் போன ரூட் தான் சரியில்லை. இந்த படத்தின் கதை கட்டாயம் சொல்லப்பட வேண்டிய கதைதான். ஆனால் மேக்கிங் ரசிக்கும் படியாக இல்லை என்று ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார். இந்த விமர்சனம் தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்