- Advertisement -
Homeபொழுதுபோக்குபழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் நடிக்கும் புதிய படம் - படத்தோட டைட்டிலே செம டிரண்டிங்கா...

பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரன் நடிக்கும் புதிய படம் – படத்தோட டைட்டிலே செம டிரண்டிங்கா இருக்குதே – அட சப்ஜெக்ட்டும் வேற லெவலா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமா கருப்பு வெள்ளையாக இருந்த காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஜாம்பவான் நடிகர்களாக மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்தனர். அதே காலகட்டத்தில் ரசிகர்கள் கொண்டாடிய மற்றொரு முக்கிய நடிகராக இருந்தவர் நாகேஷ். எம்ஜிஆர் சிவாஜி நடித்த பல படங்களில் காமெடி ரோலில் நடித்து புகழ்பெற்றவர்.

ஒரு கட்டத்துக்கு பிறகு தமிழ் சினிமா வண்ணத்திரையாக மாறிய பிறகும் நாகேஷ் நடித்தார். குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் ரிதம் வசூல் ராஜா எம்பிபிஎஸ் பூவெல்லாம் உன் வாசம் அவ்வை சண்முகி பூவே உனக்காக போன்ற படங்களில் நாகேஷ் நடித்து ரசிகர்களை அசத்தினார்.

நடிகர் கமல்ஹாசன், தனது குருவாக சிவாஜி கணேசனுக்கு பிறகு 2வது நபராக குறிப்பிட்டு சொல்வது நடிகர் நாகேஷை தான். ஆனால் நாகேஷ் போல அவரது மகன் ஆனந்தபாபு நடிகராக பெரிய அளவில் வரவேற்பை பெற முடியவில்லை. ஆனாலும் அவரும் நல்ல நடன கலைஞராக நடிகராக ரசிகர்களை கவர்ந்தார். இப்போது நாகேஷின் பேரன், நடிகர் ஆனந்தபாபுவின் மகன் கஜேஷ் நடிகராகி தமிழ் சினிமாவில் களத்தில் இறங்கி விட்டார்.

நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதையின் நாயகனாக அவர் நடிக்கும் இந்த படத்தின் பெயர் உருட்டு உருட்டு. அவருக்கு ஜோடியாக ரித்விகா ஸ்ரேயா நடிக்கிறார். ஜெய் ஸ்டுடியோஸ் கிரியேஷன்ஸ் சார்பில் இந்த படத்தை சாய் காவியா சாய் கைலாஷ் பத்ம ராஜூ ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இணைந்த தயாரிக்கின்றனர். படத்தில் மொட்டை ராஜேந்திரன் அஸ்மிதா ஹேமா பாவா லட்சுமணன் சேரன்ராஜ் நடேசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

உருட்டு உருட்டு படம் குறித்து இயக்குனர் பாஸ்கர் சதாசிவம் கூறியதாவது, சுமார் 25 30 ஆண்டுகளுக்கு முன் அரசு மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற விளம்பரம் நிறைய இருந்தது. அதுவே கொஞ்ச நாட்கள் கழித்து நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மாறியது. ஆனால் இப்போது அந்த விளம்பரங்களை எங்கேயும் பார்க்க முடியவில்லை.

அதற்கு பதிலாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமா? எங்கள் மருத்துவமனைக்கு வாங்க என்று கருத்தரிப்பு மையங்களை மட்டுமே காண முடிகிறது. இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை காமெடி கலந்து இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்றது போல் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம், என்று இயக்குனர் பாஸ்கர் சதாசிவம் கூறியிருக்கிறார். உருட்டு உருட்டு என படத்தின் டைட்டிலே டிரண்டிங் ஆன வார்த்தையாக இருப்பதால் இந்த படம் ரசிகர்களிடம் அதீத கவனம் பெற்றுவிட்டது,

சற்று முன்