- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படம் கொடுத்த ரிசல்ட், சூர்யா 45 படத்தை இயக்கும் நடிகர் ஆர்ஜே பாலாஜி...

கங்குவா படம் கொடுத்த ரிசல்ட், சூர்யா 45 படத்தை இயக்கும் நடிகர் ஆர்ஜே பாலாஜி வெளிப்படுத்திய ரியாக்சன் – ஜாலியான மனுஷனையே கலங்க வெச்சிட்டாங்களே?

- Advertisement -

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் கங்குவா படம் வெளியானது. நிச்சயமாக இந்த படம் சூர்யாவின் திரை பயணத்தில் மிக முக்கியமான ஒரு படமாக இருக்கும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்தனர். அதுவும் வரலாற்று பின்னணி படம் என்பதால் பாகுபலி ரேஞ்சுக்கு இருக்கலாம் என்றும் கருதினர்.

ஆனால் கங்குவா படத்தை ரிலீஸ் நாளில் முதல் காட்சி பார்க்க சென்ற ரசிகர்களில் 90 சதவீதம் பேர், தியேட்டரை விட்டு வெளியே வரும்போது காதுவலி மற்றும் தலைவலி போன்ற பாதிப்புகளுடன் தான் வந்தனர். அவர்கள் கூறிய விமர்சனத்தில் இருந்தே, கங்குவா எந்தளவுக்கு அவர்களை பாதித்திருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

- Advertisement -

பூமியில் படரும் செடிக்கு ஆணிவேர் போல, வீட்டுக்கு அஸ்திவாரம் போல ஒரு திரைப்படத்தை முதலில் தாங்கிப் பிடிப்பது கதையும், திரைக்கதையும்தான். அதிலேயே ஒரு இயக்குனர் வெற்றி பெற முடியாவிட்டால் படத்தில் என்ன பிரமாண்டம் இருந்தாலும், எத்தனை அழுத்தமான நடிப்பை தந்திருந்தாலும், என்ன மேக்கிங் இருந்தாலும் படம் ரசிகர்களை கவர வாய்ப்பே இல்லை.

இதைக்கூட தெரியாத ஒரு இயக்குனரா சிறுத்தை சிவா என விமர்சிக்கும் அளவுக்கு கங்குவா படத்தை மிக மோசமான ஒரு படமாக அவர் தந்திருக்கிறார் என்பது ரசிகர்களின் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாக உள்ளது. இந்த படம் ரூ. 2000 கோடி வசூலிக்கும் என்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறிய நிலையில், முதலில் 200 கோடி ரூபாய் கடக்கிறதா என்று பார்ப்போம் என்று ரசிகர்கள் சவால் விட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் சூர்யா 44 படம் வெற்றி பெற்றால்தான் சூர்யாவின் மார்க்கெட் சற்று நிமிரும். வரும் ஏப்ரலில் இந்த படம் ரிலீஸாக உள்ளது. அதே போல் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ளார். தொடர் தோல்விகளை தருவதால் ஆர்ஜே பாலாஜிக்கும் அதன் பாதிப்பு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சூர்யா 45 படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். ஸ்கிரிப்ட் புத்தகத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ள இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, நடந்துக்கொண்டிருக்கிறது, நாங்கள் நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார். அதாவது கங்குவா படத்துக்கு எதிரான விமர்சனங்களால் இப்படி ஒரு பதிவை வெளிப்படுத்தி, தன் உணர்வை ஆர்ஜே பாலாஜி காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்