- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் பெண்ணாக பிறந்திருந்தால் கமல்ஹாசனை தான் திருமணம் செய்திருப்பேன் - ரஜினி பட நடிகர் சொன்னதை...

நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமல்ஹாசனை தான் திருமணம் செய்திருப்பேன் – ரஜினி பட நடிகர் சொன்னதை கேட்டு அரண்டு போன ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் எப்போதுமே அழகானவர். இப்போதும் கூட அவர் இளமையான தோற்றத்தில் வந்தால் அழகு கம்பீரமான அழகை ரசிக்க முடியும். கடந்த 1980 90களில் பெரும்பாலான இளம்பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்தவர் நடிகர் கமல்ஹாசன்.

இளம்நடிகர்களாக இருந்த அரவிந்த் சாமி அஜீத்குமார் பிரசாந்த் ஜெயம் ரவி மாதவன் போன்றவர்களை விட அதிகளவில் இளம் ரசிகைகளால் விரும்பப்பட்டவர் நடிகர் கமல்ஹாசன் என்றால் அது மிகையல்ல. பல பிரபலமான நடிகைகள் கூட நான் கமல்ஹாசனை காதலித்தவள் என்று வெளிப்படையாக கூறியிருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் ஒரு பிரபல நடிகர் நான் பெண்ணாக பிறந்திருந்தால் நடிகர் கமல்ஹாசனை தான் திருமணம் செய்திருப்பேன் என்று கூறி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உள்ள நடிகர் சிவராஜ்குமார்தான்.

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு நண்பராக நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார், இப்போது ஜெயிலர் 2 படத்திலும் நடிக்கிறார். மேலும் கேப்டன் மில்லர் என்ற தனுஷ் படத்திலும் நடித்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் சமீபத்தில்தான் அமெரிக்கா சென்று தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று நோய் குணமான நிலையில் பெங்களூருவுக்கு திரும்பி வந்திருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கன்னட நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது, எனக்கு அமிதாப் பச்சன் கமல்ஹாசன் தான் ரொம்பவும் பிடிக்கும். கமல்ஹாசன் என்றால் அழகு. நான் பெண்ணாக இருந்திருந்தால் நிச்சயமாக கமல்ஹாசனை கல்யாணம் பண்ணி இருந்திருப்பேன். இதை நான் பல மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.

ஒருமுறை எங்கள் வீட்டுக்கு கமல் சார் வந்த போது நான் அவரை பார்த்துக்கொண்டே இருந்தேன். அப்போது கமல் சார், யார் இது என்று அப்பாவிடம் கேட்க, என் பையன் தான் என்று அப்பா சொன்னார். அப்போது கமல் சார் கிட்ட உங்களை ஒரு முறை கட்டிப்பிடித்துக் கொள்ளலாமா என்று கேட்டேன். அவரும் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார். 3 நாள் நான் குளிக்கவே இல்லை. ஏனென்றால் அவருடைய ஆரா மற்றும் ஸ்மெல் என்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அந்த மாதிரி ஒரு ரசிகன் நான் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவராஜ்குமார் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்