சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் குட் பேட் அக்லி படம் 6 நாட்களில் ரூ. 200 கோடி வசூலை கடந்து சாதனை படைத்திருக்கிறது. அஜீத்குமாரின் அதி தீவிர ரசிகராக உள்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை அஜீத் ரசிகர்களுக்கான ஒரு உன்னத படைப்பாக தந்து வெற்றி பெற்றிருக்கிறார்.
திரிஷா இல்லேன்னா நயன்தாரா அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மார்க் ஆண்டனி படங்களை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருக்கிறார். இதில் வரலாறு தீனா அமர்க்களம் வாலி பில்லா படங்களை ரெபரென்ஸ் ஆக வைத்து படம் முழுவதும் அஜீத்குமாரை திரையில் கொண்டாடி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன் என்றால் அது மிகையல்ல.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம், ஒருமுறை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சென்று அஜீத்குமார் வீட்டுக்கு சென்றுள்ளீர்கள். அங்கு அவரது வீட்டுக்கு முன்னால் நின்று நீங்கள் கதறி கதறி அழுததாக ஒரு தகவல் உள்ளதே, அதுபற்றி விளக்கமாக கூறுங்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது, அது எனக்கு மெச்சூரிட்டி இல்லாத ஒரு காலகட்டத்தில் நடந்தது. அதெல்லாம் நான் பண்ணியிருக்க கூடாது. அந்த வயசுல அதெல்லாம் தெரியாமல் நாம பண்ணிட்டோம். அஜீத்குமார் சாரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை. அவர் வீட்டுக்கு வெளியே வரவில்லை. பொதுவாக அஜீத் சாரை எங்கே பார்க்க முடியும்?
ஒரு பாயிண்ட் ஆப் டைம்ல அவர் மீதான லவ் எனக்கு ரொம்பவும் அதிகமாகி விட்டது. என்னடா இது பார்க்காமயே லவ் பண்ணிட்டு இருக்கிறோம். ஒரு வாட்டியாவது லவ்வரை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசை வரும். அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில் பிரண்ட்ஸோட சார் வீட்டு முன்னாடி போய் நின்றேன். அது பல வருஷங்களுக்கு முன்னாடி நடந்தது.
அவர் வீட்டுக்கு முன்னாடி போய் நின்று அங்கிருந்த சுவரை பார்த்துதான் பேசினேன். போங்க போங்கன்னு அங்கிருந்தவங்க எங்களை துரத்திட்டாங்க. அப்போ ரொம்பவும் பீல் பண்ணி அழுதுட்டு அப்படியே வந்துட்டோம் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார். அப்படி ஒரு ரசிகராக இருந்துதான் குட் பேட் அக்லி என்ற படத்தை அவர் தந்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.





