- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சினிமாவை விட்டு விலகறது பெரிய இழப்பு, அரசியல் பணிகளுடன் சினிமாவிலும் அவர் நடிக்க வேண்டும்...

விஜய் சினிமாவை விட்டு விலகறது பெரிய இழப்பு, அரசியல் பணிகளுடன் சினிமாவிலும் அவர் நடிக்க வேண்டும் – கோரிக்கை விடுத்த பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது 15 முதல் 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான சூப்பர் ஹிட் படங்களை ரி ரிலீஸ் செய்வது அதிகரித்து வருகிறது. மிக விரைவில் கேப்டன் பிரபாகரன் வீரம் ஆட்டோகிராப் உள்ளத்தை அள்ளித் தா பஞ்சதந்திரம் காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. இன்று நடிகர் விஜய் ஜெனிலியா நடித்த சச்சின் படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் வின்சென்ட் செல்வா இயக்கத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த படம் யூத். இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மிஷ்கின். அதன்பின்பு 2006ம் ஆண்டில் சித்திரம் பேசுதடி என்ற படம் மூலம் மிஷ்கின் இயக்குனராக மாறினார்.

அதன் பிறகு முகமூடி பிசாசு அஞ்சாதே துப்பறிவாளன் சைக்கோ என பல படங்களை இயக்கிய இயக்குனர் மிஸ்கின் இப்போது நடிகர் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் என்ற படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். படங்களை இயக்குவது மட்டுமின்றி படங்களில் மிஷ்கின் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் ஜெனிலியா வடிவேலு நடித்த சச்சின் என்ற படம் இன்று மீண்டும் ரி ரிலீஸ் செய்யப்பட்டு தியேட்டர்களுக்கு வந்துள்ளது. சச்சின் படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணுவுடன் இணைந்து நேற்று இரவு அந்த படத்தை இயக்குனர் மிஸ்கின் பார்த்து ரசித்துள்ளார்.

அதன் பிறகு செய்தியாளர்கள் சந்தித்த இயக்குனர் மிஷ்கின் கூறியதாவது, சச்சின் படம் பார்த்த போது மீண்டும் கல்லூரி காலத்துக்கு சென்றது போல் இருந்தது. விஜய் நடித்த யூத் படத்தில் தான் என்னுடைய கேரியரை தொடங்கினேன். அதன் பிறகு சச்சின் படம் திரைக்கு வந்த போது நான் பார்க்கவில்லை. இப்போதுதான் முதல் முதலாக பார்த்தேன். ரொம்பவும் ஜாலியான ஒரு படம். காதலிக்கும் போது எப்படி குழந்தைத்தனமாக இருப்போமோ அதை வைத்து ஒரு படம் சிறப்பாக செய்துள்ளனர்.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு ரொம்பவும் பிடித்தது. குறிப்பாக விஜய் ஹேண்ட்ஸம்சாக இருக்கிறார். அவர் நடித்த படங்களில் இதில் தான் அவரை மிகவும் அழகாக காட்டி இருப்பதாக கருதுகிறேன். விஜய் போன்ற ஒரு நடிகர் சினிமாவை விட்டு செல்வது மிகப் பெரிய இழப்பு. இவ்வளவு ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் அவர், அரசியல் பணிகளில் இருந்தாலும் அவ்வப்போது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் என இயக்குனர் மிஷ்கின் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

சற்று முன்