- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தி படங்களில் நடிக்க தேடி வந்த வாய்ப்புகள்… கோடி கோடியாக கொட்டித் தர முன் வந்த...

இந்தி படங்களில் நடிக்க தேடி வந்த வாய்ப்புகள்… கோடி கோடியாக கொட்டித் தர முன் வந்த தயாரிப்பாளர்கள், கேப்டனின் ரியாக்சன் – நடந்ததை சொன்ன பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் ஒரு பொக்கிஷ நடிகராக சிறந்த கலைஞராக நல்ல மனிதராக வாழ்ந்து மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த் என்றால் அது மிகையல்ல. சினிமா பின்புலமே இல்லாமல் சினிமாவுக்குள் வந்து சாதனைகள் செய்து முன்னணி நடிகராக மாறியவர் விஜயகாந்த். அவரது உதவியால் சினிமாவில் நுழைந்து சாதித்தவர்கள் ஏராளமாக உள்ளனர்.

நடிகர் விஜயகாந்ததை பொருத்த வரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அவர் தமிழ் மொழி தவிர்த்து பிற மொழி படங்களில் நடித்தது இல்லை. நடிகர் விஜயகாந்துக்கு ரசிகர்களை போலவே ரசிகைகளின் கூட்டமும் அதிகமாக இருந்தது. குறிப்பாக 1980 90களில் குடும்ப பெண்கள் பலருக்கும் விஜயகாந்த் படங்கள் என்றால் ரொம்பவும் பிடிக்கும்.

விஜயகாந்த் படம் என்றாலே அதில் ரசிக்கக்கூடிய முக்கிய அம்சம் அவரது சண்டை காட்சிகள்தான். அதிலும் பின்னால் திரும்பி காலை பின்புறமாக உயர்த்தி அவர் உதைப்பதும், சுவற்றில் குதித்து ஏறி திரும்பி ஒரு காலால் உதைப்பதும் அவரது ஸ்பெஷலாகும். அவரது சண்டை காட்சிகளை அமைத்த பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் விஜயகாந்த் குறித்து சில விஷங்களை பகிர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் கூறியதாவது, சினிமாவில் விஜயகாந்த் விஜய் இருவர் மட்டுமே சண்டை காட்சிகளில் அசத்தி விடுவார்கள். அதிலும் விஜயகாந்த் சினிமாத்தனம் இல்லாமல் சண்டை செய்பவர். அவரது சண்டை காட்சிகளை பார்த்தால் அது நிஜமாக நடப்பது போலவே இருக்கும்.

நடிகர் விஜயகாந்த் போலீஸ் உடையில் வந்தால் அவ்வளவு கம்பீரமாக இருக்கும். இப்போது கேப்டன் விஜயகாந்த் நம்முடன் இல்லை. நான் அவரை பற்றி சொல்லாமல் வேறு யாரையாவது சிறந்த நடிகர் என்று கூறி விடலாம். ஆனால் இதை பார்க்கிற ரசிகர்களுக்கு நான் பொய் சொல்கிறேன் என்று தெரிந்து விடும். ஏனென்றால் சண்டை காட்சிகளில் சிறந்த நடிகர் விஜயகாந்த் தான்.

தமிழில் பெரிய வெற்றிப் படங்களை கேப்டன் தந்த போது, அவரை இந்தியில் நடிக்க வைக்க பலர் வந்தனர். கோடி கோடியாக பணத்தை கொட்டித் தருகிறோம் என்றனர். தமிழில் மட்டும்தான் நடிப்பேன், இந்தியில் நடிக்க மாட்டேன். அட வேணாய்யா உன் காசு, போய்யா போய்யா என்றுதான் கேப்டன் அவர்களை விரட்டியடித்தார். அப்போதும் கூட அவர்கள் போகும் போது, சாப்பிட்டுட்டு போங்க என்று கூறியவர் கேப்டன் விஜயகாந்த் என ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் கூறியிருக்கிறார்.

சற்று முன்