கடந்த 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சிம்ரன். கமல்ஹாசன் விஜய் அஜீத்குமார் சரத்குமார் அர்ஜூன் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் ஒரு கேரக்டரில் சிம்ரன் நடித்திருந்தார். மேலும் பேட்ட சீமராஜா போன்ற படங்களிலும் சிம்ரன் நடித்திருந்தார்.
சில தினங்களுக்கு முன் ஒரு மேடையில் பேசிய நடிகை சிம்ரன், சமீபத்தில் என்னுடைய சமகாலத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு உங்களை இந்த மாதிரியான ரோலில் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மெசேஜ் செய்தேன். அதற்கு அவர் ஆன்ட்டி ரோலில் நடிப்பதை விடவும் இந்த மாதிரியான ரோலில் நடிக்கலாம் என்று பதில் தந்தார்.
அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. டப்பா ரோலில் நடிப்பதை விட ஆன்ட்டி ரோலில் நடிக்கலாம் எனவும் அவர் கூறியதாக சிம்ரன் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் நடிகை சிம்ரனுக்கு அப்படி மெசேஜ் அனுப்பியது லைலாவா, ஜோதிகாவா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.
ஆனால் சிம்ரனிடம் அப்படி பேசியது ஜோதிகாவாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர்தான் டப்பா கார்ட்டெல் என்ற வெப் சீரிஸில் சமீபத்தில் நடித்திருந்தார். அதனை குறிப்பிட்டு தான் டப்பா என்ற வார்த்தையை சிம்ரன் பயன்படுத்தியிருக்கிறார் என்றும் தகவல் பரவியது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, சிம்ரன் இந்த விஷயத்தில் உண்மையை தான் சொன்னாரா என்பதே ஒரு கேள்விதான். ஒருவேளை மேடை சுவாரசியத்துக்கு கூட அப்படி சொல்லி இருக்கலாம். அப்படி ஒருவேளை நடிகை சிம்ரன் பேசியது உண்மை என்றால் அது நிச்சயமாக லைலாவாக இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் லைலா அப்படி பேசும் டைப் கிடையாது.
ஆனால் ஜோதிகா அப்படி இல்லை. அவர் தமிழில் ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்து நடிக்கிறார். அதனால் தன்னுடைய சமகால நடிகை சிம்ரன் எதற்காக ஆன்ட்டி ரோலில் நடிக்க வேண்டும் என்று ஜோதிகா நினைத்திருக்கலாம். அதனை அவர் ஒரு அக்கறையாக கூட சொல்லி இருக்கலாம். அதை ஏன் சிம்ரன் பொறாமையாக பார்க்க வேண்டும். நீங்க நல்லா நடிக்கிறீங்க, நல்ல ரோல் செய்யலாமே? எதுக்காக ஆன்ட்டி ரோல் செய்ய வேண்டும் என்று கேட்பது ஒரு தவறா? கண்டிப்பாக சிம்ரன் மீதுள்ள அக்கறையில் தான் ஜோதிகா அப்படி சொல்லியிருப்பார் என்று அந்த நேர்காணலில் வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.





