- Advertisement -
Homeபொழுதுபோக்குடைரக்டர் பாலா படத்தில் நடிப்பது… அதற்கு சமம் - வணங்கான் படம் ஹீரோ அருண்...

டைரக்டர் பாலா படத்தில் நடிப்பது… அதற்கு சமம் – வணங்கான் படம் ஹீரோ அருண் விஜய் சொன்ன ஸ்டேட்மெண்ட் – ரொம்ப நொந்து போய்தான் சொல்றாரோ?

- Advertisement -

டைரக்டர் பாலா, தமிழ் சினிமாவில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான முக்கியமான இயக்குநராக இருக்கிறார். இயக்குநர் பாலு மகேந்திரா படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் பாலா. அவர் இயக்கிய முதல் படம் சேது. விக்ரம் நடித்த இந்த படம், பாலாவுக்கும் திருப்புமுனையாக இருந்தது. நடிகர் விக்ரமுக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது.

தொடர்ந்து நந்தா, பிதா மகன், பரதேசி, நான் கடவுள், தாரை தப்பட்டை என பல படங்களை இயக்கிய பாலாவின் அடுத்த படம் வணங்கான். முதலில் சூர்யா நடித்த இந்த படத்தில், ஒரு கட்டத்தில் அவர் படத்தில் இருந்து விலகி விட, நடிகர் விஜயகுமார் மகன் அருண் விஜய் ஹீரோவாக்கப்பட்டார். ஏறக்குறைய படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

- Advertisement -

டைரக்டர் பாலா படங்களை பொருத்தவரை அவரது இயக்கத்தில் நடிப்பது என்பதே நடிகர்களுக்கு பெரும்பாடுதான். ஏனெனில் அவர் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், படப்பிடிப்பு தளத்தில் மதிக்க மாட்டார். அதிக அலட்சியத்துடன் அவர் சொல்கிறபடி நடிக்கச் சொல்வார். பெரிய ஹீரோ, ஹீரோயின் என்ற மரியாதை எல்லாம் தர மாட்டார். ஒருமையில்தான் பேசுவார். மிக சாதாரணமாக தான் அவர்களை நடித்துவார்.

சமீபத்தில் பரதேசி படத்தில் நடித்தது குறித்து பேசிய நடிகர் அதர்வா, இவரது இயக்கத்தில் இனிமேல் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என தன் நெருங்கிய நண்பர்களிடம் கூறியிருக்கிறார். அதேபோல் தாரை தப்பட்டை படத்தில் நடித்த நடிகை வரலட்சுமி, ஒரு காட்சியில் வில்லன் ஆர்கே சுரேஷை என் நெஞ்சில் டைரக்டர் மிதிக்க வைத்ததால், என் எலும்பே நொறுங்கி விட்டதாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி வணங்கான் படத்தில் நடித்த மலையாள நடிகை மமிதா பைஜூ என்பவரும் சமீபத்தில் அந்த படத்தை விட்டு விலகிவிட்டார். காரணம் கேட்டதற்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு காட்சியில் நான் புரியாமல் நடிக்க திணறினேன். அதற்கான என்னை பாலா, தோள்பட்டையில் அடித்ததாக ஒரு நேர்காணலில் அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில், வணங்கான் படத்தில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய் ஒரு நேர்காணலில் கூறுகையில், டைரக்டர் பாலா படத்தில் நடிப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை. அவரது ஒரு படத்தில் நடிப்பது 100 படங்களில் நடிப்பதற்கு சமம். அந்தளவுக்கு ஒரே படத்தில் ஏகப்பட்ட அனுபவங்களை பெற்றுவிட முடியும், என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்