இயக்குனர் மகிழ் திருமேனி தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களை கொடுத்தவர். தடையற தாக்க மீகாமன் கலகத் தலைவன் தடம் முன்தினம் பார்த்தேனே உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இத்துடன் இமைக்கா நொடிகள் என்ற படத்தில் வில்லன் நடிகர் அனுராக் காஷ்யப்புக்கு பின்னணி குரல் கொடுத்தவர் மகிழ் திருமேனி.
நடிகர் அஜீத்குமார் திரிஷா நடித்த விடாமுயற்சி என்ற படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் இந்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் வழக்கமான மசாலா படங்களுக்கும் ஹீரோயிசம் பேசும் படங்களுக்கும் மத்தியில் நடிகர் அஜீத்குமார் போன்ற ஒரு ஸ்டார் நடிகர் இதுபோன்ற ஒரு படத்தில் நடித்தது மிகப்பெரிய விஷயம் என்றும் ஒரு தரப்பினர் பாராட்டினர். அர்ஜூன் ஆரவ் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை ஒரு தரப்பினர் ரசிக்கவே செய்தனர்.
விடாமுயற்சி படத்தில் வெளியூர் செல்லும் வழியில் வில்லன்களால் தன் மனைவி திரிஷா கடத்தப்படுகிறார். கொடூரமான அவர்களிடம் இருந்து தனது மனைவி திரிஷாவை அஜீத்குமார் உயிருடன் மீட்பதுதான் கதை. பெரும்பாலான காட்சிகளில் அஜீத்குமாரின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. ஆனால் மசாலா காட்சிகளை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த படம் ஏனோ மனதை கவரவில்லை.
இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்த போது, ஒருமுறை இயக்குனர் மகிழ் திருமேனி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை சந்தித்து ஒரு வரி கதை சொல்லி இருக்கிறார். அவர் சொன்ன அந்த கதை உடனே பிடித்துப் போக அவரது இயக்கத்தில் நடிக்க அமிதாப் பச்சனும் ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் விடாமுயற்சி படம் வெளியான பிறகு, அமிதாப் பச்சனை தொடர்பு கொள்ள முயற்சித்த மகிழ் திருமேனிக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
பலமுறை பல விதங்களில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவரை மகி்ழ் திருமேனியால் ரீச் செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் விடாமுயற்சி படம் தந்த பலத்த தோல்விதான் என்று தெரிய வந்துள்ளது. விடாமுயற்சி படம் பிளாப் ஆன தகவல் அமிதாப் பச்சனுக்கு நிச்சயமாக தெரிந்திருக்கும். அதனால் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க விரும்பாமல் அவரை தவிர்த்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.





